மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 16 செப் 2021

ரூ.10 கோடியில் நடிகர் சங்கத்துக்கு கட்டிடம்: பிரகாஷ் ராஜ்

ரூ.10 கோடியில் நடிகர் சங்கத்துக்கு கட்டிடம்: பிரகாஷ் ராஜ்

தெலுங்குத் திரையுலகில் நடிகர் சங்கத்திற்கென 'மூவி ஆர்ட்டிஸ்ட் அசோசியேஷன்' என்ற சங்கம் உள்ளது. அந்த சங்கத்திற்கான புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் 10ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதில் நடிகர் பிரகாஷ்ராஜ் தலைமையிலான அணிக்கும், மஞ்சு விஷ்ணு தலைமையிலான அணிக்கும்தான் கடுமையான போட்டி உள்ளது. கன்னட நடிகரான பிரகாஷ்ராஜ் எப்படி தெலுங்குத் திரையுலகத்தில் உள்ள சங்கத்திற்குப் போட்டியிடலாம் என்ற சர்ச்சை தொடக்கத்தில் எழுந்தது.

இந்நிலையில் தற்போது தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. பிரச்சாரத்தில் இரு அணிகளும் பிரதானமாக வைத்திருக்கும் வாக்குறுதி சங்கத்திற்கு சொந்தமாக கட்டிடம் கட்டுவது என்பதாகும்.

இரு தினங்களுக்கு முன்பு தேர்தல் பிரச்சாரம் சம்பந்தமாக தெலுங்கு நடிகர் சங்க உறுப்பினர்கள் பலருடன் சந்திப்பு ஒன்றை நடத்தினார் பிரகாஷ்ராஜ்.

அப்போது அவரைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தால் சங்கத்திற்கு சொந்த கட்டிடம் வாங்குவதற்கு 10 கோடி ரூபாயை நன்கொடை தருவதாக உறுதியளித்துள்ளார். இந்த தொகை என்பது தற்போதைய சினிமாவில் பிரகாஷ்ராஜ் ஒரு படத்தில் நடிப்பதற்கான சம்பளமே, இவரை விட 10 மடங்கு சம்பளம் வாங்க கூடிய நடிகர்கள் எல்லாம் மௌனமாக இருக்கும் போது அவ்வளவு பெரிய தொகையை பிரகாஷ்ராஜ் அறிவித்தது குறித்துதான் தெலுங்குத் திரையுலகத்தில் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னணி ஹீரோக்கள் பலரும் பிரகாஷ்ராஜுக்கு அவர்களது ஆதரவுகளைத் தற்போது தெரிவிக்க தொடங்கியுள்ளார்கள்.

-இராமானுஜம்

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

வியாழன் 16 செப் 2021