மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 16 செப் 2021

ஷாருக்கான் படத்தின் தலைப்பு என்ன?

ஷாருக்கான் படத்தின் தலைப்பு என்ன?

திரைப்படங்களுக்கு வைக்கும் பெயர்கள் ஒரு படத்தின் வியாபாரத்திற்கும், விளம்பரத்திற்கும், வெற்றிக்கும் அடிப்படை காரணிகளில் பிரதான இடம் பிடிக்கக்கூடியவை. நடிகர் ஷாருக்கான் நடிக்கும் இந்திப்படத்தை அட்லீ இயக்கிவருகிறார். இந்தப் படத்திற்கான தலைப்பு சிங்கம் என்று செய்தி கசிய விடப்பட்டு உள்ளது.

இயக்குநர் அட்லீ இயக்கத்தில் நடிக்கவோ, தயாரிக்கவோ தமிழ் பட தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டவில்லை. இந்த சூழலில் இந்தியில் படம் இயக்கும் முயிற்சியில் அட்லீ ஈடுபட்டார்.

அட்லீ சில வருடங்களுக்கு முன்பு ஷாருக்கானை சந்தித்து கதை கூறியுள்ளார். அது ஷாருக் கானுக்கு பிடிக்கவே தற்போது நடிக்க சம்மதித்துள்ளார். இந்தப் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். இந்து நடிகை சான்யா மல்ஹோத்ராவும் அந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

தற்போது இந்தப் படத்தில் நடிகை பிரியாமணி இணைந்துள்ளார். ஷாருக்கான் நடிப்பில் 2013ஆம் ஆண்டு வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் பிரியாமணி ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது இரண்டாவது முறையாக அவர் ஷாருக் உடன் இணைந்து நடிக்கிறார். படப்பிடிப்பு புனேவில் துவங்க உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் தலைப்பு பற்றி ஒரு தகவல் கசிந்துள்ளது. அதில் இந்த படத்திற்கு Lion என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு அனுமதி கடிதத்தில் இருந்து இந்த தகவல் வெளியாகி உள்ளது.

-இராமானுஜம்

ஷாருக்கான் மகனால் பாதிக்கப்பட்ட கலைஞர்கள்!

3 நிமிட வாசிப்பு

ஷாருக்கான் மகனால் பாதிக்கப்பட்ட கலைஞர்கள்!

என் தகப்பன்: நெடுமுடி வேணு பற்றி மம்மூட்டி உருக்கம்!

6 நிமிட வாசிப்பு

என் தகப்பன்: நெடுமுடி வேணு பற்றி  மம்மூட்டி உருக்கம்!

நாகேஷுக்கும் வாலிக்கும் உதவியவர்: ஸ்ரீகாந்த் பற்றி சிவகுமார் ...

3 நிமிட வாசிப்பு

நாகேஷுக்கும் வாலிக்கும் உதவியவர்: ஸ்ரீகாந்த் பற்றி சிவகுமார்

வியாழன் 16 செப் 2021