மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 செப் 2021

அடுத்த கேள்வி ரெடி: அப்டேட் குமாரு

அடுத்த கேள்வி ரெடி: அப்டேட் குமாரு

சார் நீங்க எந்த கூட்டணியில இருக்கீங்கனு ரிப்போர்ட்டர் கேள்வி கேட்டா... ’தம்பி நீங்க எந்த டிவியில இருக்கீங்க’னு பதில் சொல்றாரு அந்த தலைவரு. அட சரிதான்... எங்களுக்கு சம்பளம் கிடைக்குது.... அதனால இந்த டிவியில வேலை பாக்குறோம். அப்ப கூட்டணி வச்சா உங்களுக்கு எவ்வளவு கிடைக்குதுனு அடுத்த கேள்வி ரெடியாதான் இருக்கு. அந்தத் தலைவர் பதில் சொல்லுவாரா?

நீங்க அப்டேட் பாருங்க

மயக்குநன்

காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் ஆட்சியில் உ.பி.யில் இருள் சூழ்ந்திருந்தது!- உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்.

அதான்... பாஜக ஆட்சியில் 'பல்பு' கொடுத்துட்டே இருக்கீங்களா ஜீ..?!

balebalu

தமிழகம் முழுவதும் ஜவுளிக் கடைகளில் ரெய்டு -செய்தி

'தள்ளுபடி' துணிகளுக்கு மட்டும் அல்ல, அவங்க கட்டுற 'வரி'க்கும் தான் ன்னு தெரியாம போச்சே

ஜானகிராமன்

வீழ்ச்சியே .. அருவியின் கம்பீரமான எழுச்சியின் பேரழகு. -முரண்

ரமேஷ் ஏழுமலை

அவனவனுக்கு ஆயிரம் பிரச்சனை என்பதில் 999 பிரச்சனை பணம் சம்மந்தபட்டதா தான் இருக்கும்...!!!

ச ப் பா ணி

பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பித்த அனைவருக்கும் இடம் கிடைக்க வாய்ப்பு.

வர வர பி.இ படிப்பும் விஜய் அவார்ட்ஸ் மாதிரி ஆகிடுச்சு

balebalu

மதிப்பெண்களை உருவாக்கும் பள்ளிகள் மாணவர்களிடத்தில் மன உறுதியை உருவாக்க தவறுகின்றன

ச ப் பா ணி

ஆசைப்படுவது யானை அளவென்றால்

கிடைப்பதென்னவோ சோளப்பொரி அளவு

mohanram.ko

தேனீர் கடைகளில்

தரப்படும் முத்தம்

தனக்கானது என்று

கருதிய கோப்பைகள்

தனியாக கர்வத்தோடு இருந்தன

தேனீருக்கானது

என்பதை அறிந்ததும்

தண்ணீரில் மூழ்கின..

நாகராஜசோழன்.MA.MLA

கூட்டணி தர்மத்தை அதிமுக காப்பாற்றவில்லை- ராமதாஸ் அய்யா.

ராமதாஸ் அய்யா to admk-கல் நெஞ்சு காரங்க...

சரவணன். ℳ

ஒருத்தனை ஏமாத்தணும்னா முதல்ல அவன் ஆசையை தூண்டனும்...!

-சினிமா ட்ரெய்லர்

மயக்குநன்

'ஒரு காலத்தில்' காங்கிரஸ் கட்சி வலுவாக இருந்தது!- சரத் பவார்.

அதெல்லாம் 'இறந்த காலம்' ஜீ..!

மயக்குநன்

கடந்த 4 மாதங்களாக தமிழகத்தை அபாயமான இடத்துக்கு கொண்டு சென்று வருகின்றனர்!- பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி.

7 வருஷமா இந்தியாவைக் கொண்டு சென்றதை விடவா..?!

கோழியின் கிறுக்கல்!!

ஆசிரியரின் Moodஐ பொருத்து மதிப்பெண் அமைவது போலவே,

மனைவியின் மனநிலை பொருத்தே கணவனுக்குத் தண்டனை அமைகிறது!!

-லாக் ஆஃப்

நாகசைதன்யா குடும்ப நிகழ்வில் கலந்துகொள்ளாத சமந்தா

3 நிமிட வாசிப்பு

நாகசைதன்யா குடும்ப நிகழ்வில் கலந்துகொள்ளாத சமந்தா

எஸ்பிபியின் மனதில் இளையராஜா

4 நிமிட வாசிப்பு

எஸ்பிபியின் மனதில் இளையராஜா

ராய் லட்சுமியிடம் ரோபோ சங்கர் நடந்து கொண்ட விதம்!

5 நிமிட வாசிப்பு

ராய் லட்சுமியிடம் ரோபோ சங்கர் நடந்து கொண்ட விதம்!

புதன் 15 செப் 2021