மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 செப் 2021

ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் ரிலீஸ் எப்போது?

ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் ரிலீஸ் எப்போது?

நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட், நான்கு திரைப்படங்களை ஓடிடி நிறுவனம் ஒன்றுக்கு தயாரித்து கொடுப்பதற்கு ஒப்பந்தம் செய்திருந்தது.

ஒப்பந்தத்தின் படி, 'ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்' என்ற திரைப்படம் முதலில் வெளியாகிறது. இப்படத்தின் முன்னோட்டத்தை நேற்று (செப்டம்பர் 14) நடிகர் சூர்யா வெளியிட்டார்.

எளிய மக்களின் சமூகவியல் வாழ்க்கையை நையாண்டித்தனத்துடன் தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தில் திறமையான தொழில்நுட்பக் கலைஞர்களும், நடிகர்களும், புதுமுகங்களும் இடம் பெற்றிருக்கிறார்கள்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் பிரத்யேக காட்சி, செப்டம்பர் மாதம் 24ஆம் தேதி, 240 நாடுகளில் டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது.

இயக்குனர் அரிசில் மூர்த்தி இயக்கத்தில் உருவான சமூக நையாண்டி திரைப்படமான ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ கிராமிய வாழ்வியலை மையப்படுத்தி தயாராகியிருக்கும் திரைப்படம்.

மனிதநேய உணர்வுகளை நகைச்சுவை கலந்து உருவாக்கியிருக்கும் இத்திரைப்படத்தில் நடிகை ரம்யா பாண்டியன், நடிகை வாணி போஜன், நடிகர் மிதுன் மாணிக்கம் மற்றும் வடிவேல் முருகேசன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

நடிகர் சூர்யா இப்படத்தை தயாரித்திருக்கிறார், ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.

‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்‘ படத்தின் முன்னோட்டத்தில், ஒட்டுமொத்த இந்தியாவும் அதன் இதய பகுதியாக திகழும் கிராமம் ஒன்றை உற்று நோக்குகிறது.

அங்கு 35 வயதான குன்னிமுத்து என்ற விவசாயி, தன் மனைவி வீராயி என்பவருடன், காணாமல் போன தன்னுடைய பெற்றெடுத்த பிள்ளைகளைப் போல் வளர்த்த கருப்பன் மற்றும் வெள்ளையன் என்ற இரண்டு காளைகளை தேடுகிறார்கள்.

இதற்கான தேடலில் அவர்கள் ஈடுபட்டிருக்கும்போது உள்ளூர் காவல் துறையினரும், அரசியல்வாதிகளும் தங்களுக்கான நடவடிக்கைகளில் இதனை பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

அப்போது ஏற்படும் சுவாரசியமான மற்றும் எதிர்பாராத திருப்பங்களை நகைச்சுவை ததும்ப சொல்லும் வகையில் கதை பயணிக்கிறது என்கிறார் இயக்குநர்.

படத்தைப் பற்றி இயக்குநர் அரிசில் மூர்த்தி கூறுகிறபோது இந்த திரைப்படம் என் இதயத்திற்கு நெருக்கமானது. இதயப்பூர்வமான கதையை உயிர்ப்புடன் திரையில் கொண்டு வர படத்தில் பணியாற்றிய நடிகர்களும் தொழில்நுட்பக்கலைஞர்களும் சோர்வின்றி உழைத்தனர்.

படத்தில் கதையின் நாயகனான குன்னிமுத்துவின் தேடலில் அனைவருக்கும் பொதுவான உணர்வு பதுங்கு இருப்பதாகவே கருதுகிறேன். இந்தப் படம் ஓடிடியில் வெளியாவதால் சர்வதேச பார்வையாளர்களை சென்றடையும் என்றார்.

-இராமானுஜம்

விருதுகளை அள்ளிய அசுரன்!

2 நிமிட வாசிப்பு

விருதுகளை அள்ளிய அசுரன்!

கார்த்தி முடிவால் வட்டியில் சிக்கிய தயாரிப்பாளர்!

4 நிமிட வாசிப்பு

கார்த்தி முடிவால் வட்டியில் சிக்கிய தயாரிப்பாளர்!

ஐபிஎல்: மும்பையை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ்!

6 நிமிட வாசிப்பு

ஐபிஎல்: மும்பையை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ்!

புதன் 15 செப் 2021