மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 செப் 2021

கங்கனா ரணாவத் நேரில் ஆஜராக உத்தரவு!

கங்கனா ரணாவத் நேரில் ஆஜராக  உத்தரவு!

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராகத் தவறினால் கைது வாரன்ட் பிறப்பிக்கப்படும் என நடிகை கங்கனா ரணாவத்தை மும்பை நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, நடிகை கங்கனா ரணாவத் மீது, 'டிவி' பேட்டி ஒன்றில் தன்னைப் பற்றி அவதூறாகக் கூறியதாக, திரைப்படப் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கங்கனா ரணாவத் தாக்கல் செய்த மனுவை, மும்பை உயர் நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்திருந்தது

இந்த நிலையில், கங்கனா மீதான அவதூறு வழக்கு, மும்பை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கங்கனாவின் வழக்கறிஞர் திரைப்பட விளம்பரத்திற்காக கங்கனா சென்றபோது, அவருக்கு கொரோனா அறிகுறி தோன்றி இருப்பதால், நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

இதற்கு ஆட்சேபம் தெரிவித்த ஜாவேத் அக்தர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கை இழுத்தடிக்கவே கங்கனா ரணாவத் ஏதாவது ஒரு சாக்கு சொல்லி வருவதாக குற்றஞ்சாட்டினார்.

இதையடுத்து, அடுத்த முறை வழக்கு விசாரணைக்கு கங்கனா நேரில் ஆஜராகத் தவறினால் கைது வாரன்ட் பிறப்பிக்கப்படும் என நீதிபதி ஆர்.ஆர்.கான் எச்சரித்து, வழக்கை 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

-இராமானுஜம்

பொன்னியின் செல்வன் ‘வந்தியதேவன்’ புறப்பட்டார்!

2 நிமிட வாசிப்பு

பொன்னியின் செல்வன் ‘வந்தியதேவன்’ புறப்பட்டார்!

‘நாய் சேகர்’ முதல் பார்வை!

3 நிமிட வாசிப்பு

‘நாய் சேகர்’ முதல் பார்வை!

அரண்மனை 3 படத்தை வாங்கிய உதயநிதி

4 நிமிட வாசிப்பு

அரண்மனை 3 படத்தை வாங்கிய உதயநிதி

புதன் 15 செப் 2021