மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 செப் 2021

ரசிகர்களைக் கண்டித்த ரஜினி ரசிகர் மன்றம்!

ரசிகர்களைக் கண்டித்த ரஜினி ரசிகர் மன்றம்!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்துள்ளார் ரஜினிகாந்த். இதன் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. விநாயகர் சதுர்த்தி அன்று இந்தப் படத்தின் முதல் பார்வை மற்றும் மோஷன் போஸ்டர் வெளியானது.

இதை வரவேற்று ரசிகர்கள் கொண்டாடினர். இன்னும் சில வெறிப்பிடித்த ரசிகர்கள் ரஜினியின் அண்ணாத்த பிளக்ஸ் முன்பு ஆட்டை பலி கொடுத்து அதன் ரத்தத்தை அந்த பேனர் மீது அபிஷேகம் செய்துவிட்டு அதை வீடியோவாக சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர். இது பொதுவெளியில் கடும் அதிர்ச்சியையும் வெறுப்பையும் மக்கள் மத்தியில் உண்டாக்கியது.

இதுதொடர்பாக நடிகர் ரஜினியோ அல்லது படக்குழுவினர் தரப்பில் இருந்தோ இச்செயல் செய்தவர்களைக் கண்டிக்கவில்லை. இதனாலயே அதைச் சுட்டிக்காட்டி இதுபோன்ற செயல்களில் ஈடுபட்ட ரசிகர்களைத் தடுக்க வலியுறுத்தி ரஜினி மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி சுதாகர் வெளியிட்ட அறிக்கையில், 'அண்ணாத்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் மீது ஒரு சிலர் ஆடு வெட்டி ரத்த அபிஷேகம் செய்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது மட்டுமின்றி மிகவும் வருந்தத்தக்கது. அருவருப்பான இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-இராமானுஜம்

யோகிபாபுவுக்கு நன்றி சொன்ன விவேக் மகள்!

2 நிமிட வாசிப்பு

யோகிபாபுவுக்கு நன்றி சொன்ன விவேக் மகள்!

ஐபிஎல்: கோலி அணியை வீழ்த்திய டோனி அணி!

5 நிமிட வாசிப்பு

ஐபிஎல்: கோலி அணியை வீழ்த்திய டோனி அணி!

ஒன்றிய அரசுக்கு பயப்படும் விஜய்: தயாரிப்பாளர் கே.ராஜன்

3 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசுக்கு பயப்படும் விஜய்: தயாரிப்பாளர் கே.ராஜன்

புதன் 15 செப் 2021