மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 செப் 2021

அனபெல் சேதுபதி: இயக்குநர் தீபக் விளக்கம்!

அனபெல் சேதுபதி: இயக்குநர் தீபக் விளக்கம்!

பேஷன்ஸ் ஸ்டூடியோஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் சுதன் சுந்தரம், ஜி.ஜெயராம் தயாரிப்பில், தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியிருக்கும் பிரமாண்டமான காமெடி திரைப்படம் ‘அனபெல் சேதுபதி’.

விஜய் சேதுபதி, டாப்ஸி பண்ணு இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், ஜெகபதி பாபு, ராஜேந்திர பிரசாத், ராதிகா சரத்குமார், வெண்ணிலா கிஷோர், சேத்தன், தேவதர்ஷினி, சுப்பு பஞ்சு, யோகி பாபு, மதுமிதா, ராஜு சுந்தரம், சுரேஷ் மேனன், ஜார்ஜ் மரியன், ராஜ்குமார், சுனில், சுரேகா வாணி, லிங்கா, ஹர்ஷதா, இந்து ரவி மற்றும் குழந்தை நட்சத்திரங்கள் உத்ரா, யுவனேஷ் மற்றும் அஷ்வின் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை இயக்கியிருக்கும் இயக்குநரான தீபக் சுந்தர்ராஜன், 1980-1990களில் தமிழ்ச் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக தொடர் வெற்றிப்படங்களை இயக்கிய ஆர்.சுந்தர்ராஜனின் மகனாவார்.

உலகமெங்கும் வரும் செப்டம்பர் 17 அன்று டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள இந்தப் படத்தின் முன்னோட்டமாக இயக்குநர் சுந்தர்ராஜனும், அவரது மகனும் அறிமுக இயக்குநருமாகிய தீபக் சுந்தர்ராஜனும் இணைந்து பத்திரிகையாளர்களை நேற்று (14.09.2021) மாலை சென்னயில் சந்தித்தனர்.

இந்த நிகழ்வில் இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன் பேசும்போது, "இந்தப் படம் ஹாரர் டைப் படம் இல்லை. இது ஒரு ஃபேண்டஸி காமெடி படம். எல்லா படங்களின் கதைக்கும் ஏதாவது ஒரு இன்ஸ்பிரேஷன் கண்டிப்பாக இருக்கும். அது இல்லாமல் யாரும் கதை எழுத முடியாது. இதுவும் பல கதைகளின் இன்ஸ்பிரேஷன் உள்ள கதையம்சத்தில்தான் உருவாகியுள்ளது.

இந்தப் படத்துக்குத் தொடக்கத்திலேயே ‘அனபெல் சுப்ரமணியம்’, ‘அனபெல் சேதுபதி’ என்று இரண்டு தலைப்புகளைத் தேர்வு செய்து வைத்திருந்தோம். பின்பு அனைவரிடமும் கலந்து பேசி ‘அனபெல் சேதுபதி’ பெயரையே தேர்வு செய்துவிட்டோம்.

இயக்கத்தை நான் இயக்குநர் ஏ.எல்.விஜய்யிடம்தான் கற்றுக் கொண்டேன். அப்பாவிடம் மனித பண்புகளைத்தான் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன்.

அப்பா இயக்கம் செய்தபோது அந்தப் பட ஷூட்டிங்கை போய் பார்த்திருக்கிறேன். அப்போதெல்லாம் எங்களை வெளியில் அனுப்பிவிட்டுத்தான் அவர் இயக்கத்தைத் தொடர்வார். எனக்கும் இப்போது அப்பாவை நடிக்க வைத்து இயக்கம் செய்ய தயக்கமாக உள்ளது. அவர் வேறு செட் ஆள், நமக்கு சரியாக வருவாரா என்று தெரியவில்லை. அதனால்தான் இந்தப் படத்தில் அவரை நடிக்க வைக்கவில்லை.

நான் எழுதியிருந்த கதைக்கு இது போன்ற கோட்டை, கொத்தளத்துடன் கூடிய அரண்மனை தேவையாக இருந்தது. முதலில் செட் போட்டு எடுக்கலாம் என்றுதான் நினைத்திருந்தோம். ஆனால், நான் நினைத்தது போலவே இந்த ஜெய்ப்பூர் கோட்டை இருந்ததால் அங்கேயே முழு படத்தையும் எடுத்து முடித்துவிட்டோம்.

தொடர்ந்து காமெடி படங்களாகச் செய்ய எனக்கு ஆசை இல்லை. வித்தியாசமான களங்களில் படங்கள் செய்வேன். நடிக்கும் எண்ணமும் எனக்கு இல்லை. தொடர்ந்து படங்கள் இயக்குவதில்தான் கவனம் செலுத்தவுள்ளேன். இதே நிறுவனத்திற்கு மீண்டும் ஒரு படம் இயக்கவுள்ளேன்” என்றார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:

எழுத்து, இயக்கம் – தீபக் சுந்தர்ராஜன், ஒளிப்பதிவு – கௌதம் ஜார்ஜ், படத் தொகுப்பு – பிரதீப் இ.ராகவ், இசை – கிருஷ்ணா கிஷோர், கலை இயக்கம் – வினோத் ராஜ்குமார், நடன இயக்கம் – தினேஷ், சண்டை இயக்கம் – தினேஷ் காசி.

-இராமானுஜம்

பொன்னியின் செல்வன் ‘வந்தியதேவன்’ புறப்பட்டார்!

2 நிமிட வாசிப்பு

பொன்னியின் செல்வன் ‘வந்தியதேவன்’ புறப்பட்டார்!

‘நாய் சேகர்’ முதல் பார்வை!

3 நிமிட வாசிப்பு

‘நாய் சேகர்’ முதல் பார்வை!

அரண்மனை 3 படத்தை வாங்கிய உதயநிதி

4 நிமிட வாசிப்பு

அரண்மனை 3 படத்தை வாங்கிய உதயநிதி

புதன் 15 செப் 2021