மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 14 செப் 2021

புதிய தலைப்பை தேடும் வடிவேலு

புதிய தலைப்பை தேடும் வடிவேலு

இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படம் தொடர்பாக எழுந்த சர்ச்சையில் வடிவேலு புதிய படங்களில் நடிக்கத் தயாரிப்பாளர்கள் சங்கம் தடை விதித்ததால் அவர் படங்களில் நடிக்காமலிருந்தார். தற்போது அந்த பிரச்சினை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட்டுள்ளது.

இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் சுந்தர் சி நடிப்பில் வெளியான தலைநகரம் படத்தில் நாய் சேகர் என்ற கதாபாத்திரத்தில் வடிவேலு நடித்திருந்தார். இந்த கேரக்டர் பேசும் வசனங்கள் பிரபலமானவை, நாய் சேகர் என்கிற பெயர் எளிதில் மக்களிடம் சென்றடைந்தது.

அந்தப் பெயரை வடிவேல் நடிக்கும் படத்திற்குத் தலைப்பாக வைக்க முடிவு செய்து அறிவித்தனர் வடிவேல் தரப்பில். ஆனால் காமெடி நடிகர் சதிஷ் மற்றும் குக் வித் கோமாளி பவித்ரா நடிப்பில் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் படப்பிடிப்பு முடிவடைந்த படத்திற்கு நாய் சேகர் என தலைப்பு வைக்கப்பட்டிருப்பதைத் தனது அறிவிப்புக்குப் பின் அறிந்துகொண்ட வடிவேலு, ஏஜிஎஸ் நிறுவனத்திடம் அந்தப் பெயரை விட்டுக்கொடுங்கள் என்று கேட்டதாகவும் கூறப்பட்டது.

தற்போதைய தகவல்படி நாய் சேகர் தலைப்பை ஏஜிஎஸ் நிறுவனம் விட்டுக் கொடுப்பதாக இல்லை என தெரிவித்துவிட்டனர். அதனால் தோசையைத் திருப்பி போடும் கதையாக மீண்டும் வடிவேலுவின் நாய் சேகர், மதுரை நாய் சேகர், நானும் ரவுடிதான் போன்ற புதிய தலைப்புகளைச் சூட்ட இயக்குநர் சுராஜ் மற்றும் வடிவேலு தரப்பு தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறது,

-இராமானுஜம்

பேரு வச்சாலும் பாடல்... ரகசியத்தைப் பகிர்ந்த இளையராஜா

3 நிமிட வாசிப்பு

பேரு வச்சாலும் பாடல்... ரகசியத்தைப் பகிர்ந்த இளையராஜா

உதயநிதி படத்தில் வடிவேலு?

3 நிமிட வாசிப்பு

உதயநிதி படத்தில் வடிவேலு?

வடிவேலு படத் தலைப்பு: சிவகார்த்திகேயன் கருத்து!

3 நிமிட வாசிப்பு

வடிவேலு படத் தலைப்பு: சிவகார்த்திகேயன் கருத்து!

செவ்வாய் 14 செப் 2021