மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 14 செப் 2021

கார்த்தி டார்லிங்... குஷ்பூ பிறந்தநாள் வாழ்த்து!

கார்த்தி டார்லிங்... குஷ்பூ பிறந்தநாள் வாழ்த்து!

நடிகர் கார்த்திக் நேற்று தனது 61ஆவது பிறந்த நாளை கொண்டாடினார். அதையொட்டி அவருக்கு நடிகை குஷ்பூ தனது ட்விட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்தைத் தெரிவித்திருக்கிறார்.

அதில், ‘என் டார்லிங்கிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள். என் நெருங்கிய நண்பர்... என் முரளி... என் கணவருக்கு அண்ணன்... என் குழந்தைகளுக்கு அன்பான பெரியப்பா… கார்த்திக், நீங்கள் எப்பொழுதுமே எங்களுக்கு ஸ்பெஷலானவர். உங்களை கொஞ்சம் அளவுக்கு அதிகமாக நேசிக்கிறேன். அது உங்களுக்கே தெரியும்…’ என்று குறிப்பிட்டுள்ளார். முரளி என்பது கார்த்திக்கின் இயற்பெயர்.

கார்த்திக்கும் குஷ்பூவும் மிக நெருங்கிய நண்பர்கள். நான் கார்த்திக்கின் மிகப் பெரிய ரசிகை என்று குஷ்பூ பலமுறை பொதுவெளியில் கூறியுள்ளார். குஷ்பூ கார்த்திக்குடன் நடித்திருந்த ‘வருஷம் 16’ படம்தான் குஷ்பூவுக்கு தமிழ்ச் சினிமாவில் மிகப் பெரிய பிரேக் கொடுத்த படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஜோடி நடித்த இன்னொரு படமான கிழக்கு வாசலும் ஹிட் அடித்தது.

-இராமானுஜம்

அரண்மனை 3 படத்தை வாங்கிய உதயநிதி

4 நிமிட வாசிப்பு

அரண்மனை 3 படத்தை வாங்கிய உதயநிதி

ரூ.10 கோடியில் நடிகர் சங்கத்துக்கு கட்டிடம்: பிரகாஷ் ராஜ்

2 நிமிட வாசிப்பு

ரூ.10 கோடியில் நடிகர் சங்கத்துக்கு கட்டிடம்: பிரகாஷ் ராஜ்

ஆட்டிசம் பாதித்த பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ்

3 நிமிட வாசிப்பு

ஆட்டிசம் பாதித்த பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ்

செவ்வாய் 14 செப் 2021