மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 13 செப் 2021

அருண் விஜய் நடிக்கும் படத்தின் பெயர்!

அருண் விஜய் நடிக்கும் படத்தின் பெயர்!

இயக்குநர் ஹரியின் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படத்துக்கு ‘யானை’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் கிராமம் முதல் நகரம் வரை அனைவரும் பார்க்கும் வகையில் மசாலா படங்கள் தருபவர் இயக்குநர் ஹரி.

தமிழின் முன்னணி நட்சத்திரங்களை வைத்து மிகப் பெரிய வெற்றிப் படங்களை தந்த இவர், பெயரிடப்படாத படம் ஒன்றை நடிகர் அருண் விஜய் உடன் இணைந்து பெரிய பட்ஜெட்டில் இயக்கி வந்தார்.

இந்த நிலையில் இந்தப் படத்துக்கு ‘யானை’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஏற்கனவே ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘சிங்கம்’ ஹிட்டானது அருண் விஜய் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். மேலும் இதில் சமுத்திரக்கனி, ராதிகா, யோகி பாபு, கேஜிஎஃப் புகழ் கருடா ராம், ராஜேஷ், அம்மு அபிராமி, ஜெயபாலன், புகழ், போஸ் வெங்கட், தலைவாசல் விஜய், இமான் அண்ணாச்சி, ஐஸ்வர்யா, ரமா ஆகியோரும் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்

இசை – ஜிவி. பிரகாஷ்குமார், ஒளிப்பதிவு – கோபிநாத், படத் தொகுப்பு – ஆண்டனி, சண்டை இயக்கம் – அனல் அரசு, கலை இயக்கம் – மைக்கேல்,இணை தயாரிப்பு – ஜி.அருண்குமார்,

கிராமத்து பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி, பழநி, ராமேஸ்வரம் முதலான பகுதிகளில் கடந்த மாதம் முதல் நடந்து வந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து மீண்டும் தூத்துக்குடி, ராமேஸ்வரம், பழநி பகுதிகளில் நடைபெற உள்ளது.

-இராமானுஜம்

நாகசைதன்யா குடும்ப நிகழ்வில் கலந்துகொள்ளாத சமந்தா

3 நிமிட வாசிப்பு

நாகசைதன்யா குடும்ப நிகழ்வில் கலந்துகொள்ளாத சமந்தா

எஸ்பிபியின் மனதில் இளையராஜா

4 நிமிட வாசிப்பு

எஸ்பிபியின் மனதில் இளையராஜா

ராய் லட்சுமியிடம் ரோபோ சங்கர் நடந்து கொண்ட விதம்!

5 நிமிட வாசிப்பு

ராய் லட்சுமியிடம் ரோபோ சங்கர் நடந்து கொண்ட விதம்!

திங்கள் 13 செப் 2021