மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 13 செப் 2021

5 கிலோ மீட்டர் சுத்து வட்டாரத்துக்கு: அப்டேட் குமாரு

5 கிலோ மீட்டர் சுத்து வட்டாரத்துக்கு: அப்டேட் குமாரு

உள்ளாட்சித் தேர்தல் நடக்குற மாவட்டத்தை சுத்தியுள்ள 5 கிலோ மீட்டருக்கு நடத்தை விதி அமல்ல இருக்கும்னு சொல்லியிருக்காங்க. அப்படிப் பாத்தா தேர்தலுக்கு கொடுக்குற இத்யாதி இத்யாதிகளையும் அந்த 5 கிலோ மீட்டர் சுத்துவட்டார மக்களுக்கு கொடுக்கணும்னும் ஒரு ஆர்டரை சேர்த்து போடுங்க அதிகாரி. கட்டுப்பாட்டை அனுபவிக்கிற அதேநேரம் தேர்தல் நேரத்து அன்பளிப்புகளையும் அனுபவிக்கணும்ல...

நீங்க அப்டேட் பாருங்க

சரவணன். ℳ

“எம்.எல்.ஏ நிதியை ரூ.5 கோடியாக உயர்த்த வேண்டும்”

- விருத்தாச்சலம் எம்.எல்.ஏ ராதாகிருஷ்ணன்.

ஆமாமா.. தனலாபம் எம்எல்ஏ பணம் எண்ணும் மிஷின் எல்லாம் வேற வாங்கி வச்சிருக்காங்களே...!?

amudu

லாக் டௌனில் அதிக பேரால் செய்யப்பட்ட வேலை, அவர்களின் ஆடைகளின் தையலைப் பிரித்ததாகத் தான் இருக்கும்.

செங்காந்தள்

போனில் சார்ஜ் இல்லாத போதும்,போனை எடுத்து வர மறந்து விட்ட போதிலும் முக்கியமான போன் கால்கள் வரும் என நினைப்பது உலகப் பொதுமறை...!!!

PrabuG

பிரச்சனை வரும்னு தெரிஞ்ச உடனே எதுவும் பேசாம வீட்டை விட்டு வெளியே போகும் கணவர்கள் அனைவரும் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு ரோல் மாடல்களே!!

செங்காந்தள்

இணையவாசிகளுக்கு டீயை விட காப்பியே அதிகம் பிடிக்கிறது...!!!

கடைநிலை ஊழியன்

பண்டிகை விடுமுறை முடிந்து வேலைக்கு போறது ங்கிறது midterm exam லீவ் முடிஞ்சு ஸ்கூலுக்கு போற அதே பீலிங் தான் !!

balebalu

ஏண்ணே அவனை அடிக்கிறீங்க ?

பின்ன என்ன? செவன் டிஜிட் சேலரி ன்னா வாரத்துல 7 நாளும் சம்பளம் தருவாங்களா ன்னு கேக்குறாம்ப்பா

ச ப் பா ணி

சரி சரி நான் செஞ்ச தப்பெல்லாம் மறந்திடு என்பதன் நாகரீக வெர்ஷனே

"பாஸ்ட் ஈஸ் பாஸ்ட்"

தர்மஅடி தர்மலிங்கம்

"நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பாஜக 400 இடங்களை கைப்பற்றும்" - அண்ணாமலை.

ஓட்டு கேட்டுங்களா இல்லை ஒட்டு கேட்டுங்களா.??

மயக்குநன்

சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்கள் குறித்த 3-வது பட்டியலை இந்தியா இந்த மாதம் பெறவுள்ளது!- செய்தி.

கருப்புப் பணத்தை மீட்பாங்கன்னு பார்த்தா... கணக்குப் பட்டியலை மீட்டுக்கிட்டு இருக்காங்க..!

கோழியின் கிறுக்கல்!!

கடன் வாங்கி நம் வசதிகளைப் பெருக்கிக் கொள்வது நடுத்தரவர்க்கத்தின் சாபக்கேடு!!

யோகிபாபுவுக்கு நன்றி சொன்ன விவேக் மகள்!

2 நிமிட வாசிப்பு

யோகிபாபுவுக்கு நன்றி சொன்ன விவேக் மகள்!

ஐபிஎல்: கோலி அணியை வீழ்த்திய டோனி அணி!

5 நிமிட வாசிப்பு

ஐபிஎல்: கோலி அணியை வீழ்த்திய டோனி அணி!

ஒன்றிய அரசுக்கு பயப்படும் விஜய்: தயாரிப்பாளர் கே.ராஜன்

3 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசுக்கு பயப்படும் விஜய்: தயாரிப்பாளர் கே.ராஜன்

திங்கள் 13 செப் 2021