மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 12 செப் 2021

கெளதம்மேனன் ஜி.வி.பிரகாஷின் செல்ஃபி!

கெளதம்மேனன் ஜி.வி.பிரகாஷின் செல்ஃபி!

தமிழ் சினிமாவில் விஜய்சேதுபதியுடன் போட்டிபோடும் அளவுக்கு அதிகப்படங்களில் நடித்துக்கொண்டிருப்பவர் ஜி.வி.பிரகாஷ் .

தற்போது இசையமைப்பதை காட்டிலும் நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் என கூறப்படுகிறது. அந்த வகையில் அவர் இசை அமைக்கும் படங்களை விட ஹீரோவாக நடிக்கும் படங்கள் தான் அதிகம்.

அது போலவே கௌதம் மேனன் இயக்கும் படங்களை விட அவர் முக்கிய ரோல்களில் நடிக்கும் படங்களின் எண்ணிக்கை தான் தற்போது அதிகமாக உள்ளது. இந்த இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருக்கின்றனர்.

ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்து நடிக்கும் இப்படத்தில் கௌதம் மேனன் முக்கிய ரோலில் நடிக்கிறார். கலைப்புலி தாணுவின் வி.கிரியேஷன்ஸ் உடன் இணைந்து டி.ஜி பிலிம் கம்பெனி இப்படத்தை தயாரிக்கின்றனர். ஆக்க்ஷன் திரில்லர் வகையில் உருவாகி வரும் இப்படத்திற்கு ‛செல்பி' என பெயரிட்டுள்ளனர்.

இன்ஜினியரிங் கல்லூரி பின்னணியை கொண்ட கதையாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பார்வையை இயக்குனர் வெற்றிமாறன் இன்று வெளியிட்டார்.

-இராமானுஜம்

ஜெய்பீம்: ஆஸ்காரைத் தொடர்ந்து அடுத்த அங்கீகாரம்!

3 நிமிட வாசிப்பு

ஜெய்பீம்: ஆஸ்காரைத் தொடர்ந்து அடுத்த அங்கீகாரம்!

மன்மத லீலை சர்ச்சை: வெங்கட் பிரபு விளக்கம்!

4 நிமிட வாசிப்பு

மன்மத லீலை சர்ச்சை: வெங்கட் பிரபு  விளக்கம்!

பொங்காத பொங்கல் திரைப்படங்கள்!

4 நிமிட வாசிப்பு

பொங்காத பொங்கல் திரைப்படங்கள்!

ஞாயிறு 12 செப் 2021