மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 12 செப் 2021

வியாபார நெருக்கடியில் கோடியில் ஒருவன்!

வியாபார நெருக்கடியில் கோடியில் ஒருவன்!

கொரோனா ஊரடங்குக்குப் பிறகு 50% இருக்கைகள் மட்டுமே நிரப்பப்பட வேண்டும் என்கிற விதிமுறையோடு திரையரங்குகள் ஆகஸ்ட் 23 ஆம் தேதி திறக்கப்பட்டன.

ஆனாலும், சுமார் இரண்டு வாரங்கள் கழித்து, குறிப்பிடத்தக்க படங்களாக செப்டம்பர் 9 ஆம் தேதி விஜய்சேதுபதி நடித்த லாபம் படமும் செப்டம்பர் 10 ஆம் தேதி ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று படம் என கூறப்பட்டு வந்த தலைவி படமும் வெளியானது.

திரைத்துறை சார்ந்த அனைவரும் நம்பிக்கையோடு எதிர்பார்த்த இந்த இரண்டு படங்களும் திரையரங்குக்கு மக்களை கொண்டுவந்து சேர்க்கும் என நம்பிக்கையுடன் இருந்தனர். அந்த நம்பிக்கை தவிடுபொடியாகி இருக்கிறது. தமிழகத்தில் மட்டும் ஒரு நாளில் வசூல் ஆகவேண்டிய மொத்த தொகை அகில இந்திய அளவில் கூட திரையரங்குகள் மூலம் வசூல் ஆகவில்லை.

இந்த நிலையில் செப்டம்பர் 17 ஆம் தேதி விஜய் ஆண்டனி நடித்துள்ள கோடியில் ஒருவன் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இப்போது வரை அப்படத்தின் வியாபாரம் முடிவடையவில்லை என்கிறார்கள்.

லாபம் எட்டு கோடி, தலைவி எட்டு கோடி ரூபாய்க்கு மினிமம் கேரண்டி, விநியோக முறையில் வியாபாரம் செய்யப்பட்டிருந்த நிலையில் கோடியில் ஒருவன் தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமைக்கு நான்கு கோடி ரூபாய் விலை கூறியுள்ளனர் தயாரிப்பாளர்கள் தரப்பில். ஆனால் அந்தவிலை கொடுத்து வாங்க விநியோகஸ்தர்கள் தரப்பில் யாரும் விருப்பம் காட்டவில்லையென்று கூறப்படுகிறது.

அதேபோல, சேலம் பகுதியில் விநியோக அடிப்படையில் முதலில் எழுபத்தைந்து லட்சம் என்று சொல்லியிருக்கிறார்கள். யாரும் வாங்க முன்வராததால் நாற்பது லட்சம் என்று விலையை குறைத்திருக்கிறார்கள். அதற்கும் யாரும் முன்வரவில்லை என கூறப்படுகிறது

படமும் சுமாராக இருக்கிறது என்கிற செய்தி , பொருளாதார நெருக்கடியில் அம்மிக்கல்லாக கருதப்பட்ட லாபம், தலைவி படங்களே பறக்கிற சூழ்நிலையில் தொடர் தோல்வி படங்களை வழங்கிவந்த விஜய் ஆண்டணி நாயகனாக நடித்துள்ள கோடியில் ஒருவன் எம்மாத்திரம் என்கின்றனர் விநியோகஸ்தர்கள் என்பதே தமிழ் சினிமாவட்டாரத்தில் விவாதப்

பொருளாக மாறி இருக்கிறது

இதுகுறித்து, படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கமல்போராவிடம் பத்திரிகையாளர் ஒருவர் கேட்டபோது, நீங்கள் கேள்விப்பட்ட எதுவும் உண்மையில்லை, படத்தின் வியாபாரம் நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது, படம் திட்டமிட்டபடி வெளியாகும் என்கிறார்.

-இராமானுஜம்

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

6 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

நடிகர்களை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா மந்தனா

3 நிமிட வாசிப்பு

நடிகர்களை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா மந்தனா

வாகா எல்லையில் நடிகர் அஜித்

2 நிமிட வாசிப்பு

வாகா எல்லையில் நடிகர் அஜித்

ஞாயிறு 12 செப் 2021