மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 12 செப் 2021

உங்க அண்ணா: அப்டேட் குமாரு

உங்க அண்ணா: அப்டேட் குமாரு

அண்ணாமலை இப்ப புதுசா லெட்டர் எழுத ஆரம்பிச்சிருக்காரு. டெய்லி இனி பாஜக தொண்டர்களுக்கு கடிதம் எழுதப் போறாராம். கடிதத்தை முடிக்கும்போது உங்கள் அண்ணா- அப்படினு போட்டு முடிக்கிறாரு. அண்ணாமலைனு முழுசா எழுதாம அண்ணானு எழுதுறாரே...இதுல ஏதும் உள்குத்து இருக்கா... ஏற்கனவே எங்கள் அண்ணா கேப்டன் இருக்காரு. அதுக்கு முன்னாடியே எல்லாருக்கும் அண்ணா நம்ம பேரறிஞர் இருக்காரு. இதுல அண்ணாமலை யாரை ஃபாலோ பண்றாரு?

நீங்க அப்டேட் பாருங்க

amudu

"நாளைக்கு ஸ்கூல் லீவு" என்ற அறிவிப்பு தந்த சந்தோசத்தை, "நாளைக்கு ஆன்லைன் கிளாஸ்க்கு லீவு" என்ற அறிவிப்பு தருவதில்லை.

உள்ளூராட்டக்காரன்

இந்த காலத்து குழந்தைங்க ABCD கத்துக்குறதுக்கு முன்னாடியே Skip Ads எப்போ அழுத்தணும் கத்துக்குதுங்க

Mannar & company

வயிறு சரியில்லன்னு சாப்பிடாம இருப்பவர்களை விட,

மனசு சரியில்லன்னு சாப்பிடாம இருப்பவர்களே அதிகம்.

கோழியின் கிறுக்கல்!!

'டேய் அண்ணா' என்று தங்கை அழைப்பதும் மரியாதையில் தான் சேரும்!!

நாகராஜசோழன்.MA.MLA.

வாட்ஸ்அப் ஸ்டேட்ஸ் வைக்கறது என்னமோ தினசரி கடமை மாதிரி செஞ்சிட்டு இருக்காங்களே...

இதுல ஹைலைட் என்னன்னா

ஸ்டேட்டஸ் வைக்கத்வங்களை என்னமோ வேஸ்ட் பீஸ் மாதிரி பாக்கறது தான்...

மயக்குநன்

சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்குள் ஆட்சிக்காலம் முடிந்துவிட்டது!- எடப்பாடி பழனிசாமி.

பத்து வருஷ ஆட்சிக்காலம் பத்தல போல..?!

balebalu

மடிப்பு கலையாத பட்டு புடவை

கசங்காத ஆபீஸ் ஷர்ட்

கறை படியாத பசங்க யூனிபார்ம்

கொரோனா காலத்து வார்ட்ரோப்

செங்காந்தள்

மணியையும், நிமிடத்தையும், நொடியையும் மிச்சப்படுத்த நினைத்து வாழ்நாளைத் தொலைத்து விடுகிறார்கள் வேகமாக ஓட்டும் வாகன ஓட்டிகள்...!

Mannar & company

இரண்டு வரிகளில் வாழ்க்கை தத்துவங்களை சொன்னவர்-

வள்ளுவர்,

இரண்டு வார்த்தைகளில் வாழ்க்கை தத்துவங்களை சொன்னவர்-

வடிவேலு!

PrabuG

தமிழ் நாட்டுல, வால் நட்சத்திரம் மாதிரிதான் பாஜகவுடைய நம்பிக்கை நட்சத்திரங்களும்.

வந்த வேகத்துல காணாமல் போயிடுறாங்க...

காளையன்..

புத்தனுக்கு

"போதி"மரம் கெடச்சுருக்கு.. வெட்ட வெட்ட

"போதிய" மரம் கிடைக்கல மனுசனுக்கு..

மயக்குநன்

2024-ம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில், இந்தியாவின் பதக்க எண்ணிக்கையை இரட்டிப்பாக்க வேண்டும்!- வெங்கய்ய நாயுடு.

அதுக்குள்ள... விவசாயிகளின் வருமானத்தை ரெட்டிப்பாக்கிடுவாங்களா அண்ணே..?!

கோழியின் கிறுக்கல்

ஒருவரை அறிமுகப்படுத்தும் பொழுது, 'அவர் இன்ன சாதி' என்று கூறுபவர் சட்டென சிறுமைப்பட்டு போகிறார்!!

-லாக் ஆஃப்

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

6 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

முதல்வர் வீட்டின் முன் உண்ணாவிரதம் இருப்பேன்: டி.ராஜேந்தர்

8 நிமிட வாசிப்பு

முதல்வர் வீட்டின் முன் உண்ணாவிரதம் இருப்பேன்: டி.ராஜேந்தர்

ஞாயிறு 12 செப் 2021