மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 11 செப் 2021

கொரோனா பாதிப்பு: ஐந்தாவது டெஸ்ட் ரத்து!

கொரோனா பாதிப்பு: ஐந்தாவது டெஸ்ட் ரத்து!

கொரோனா பாதிப்பு எதிரொலியாக இந்தியாவுடனான ஐந்தாவது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்படுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. மழையால் பாதிக்கப்பட்ட முதலாவது டெஸ்ட் டிராவில் முடிந்தது. லண்டன் லார்ட்ஸில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்திலும், லீட்ஸில் நடந்த மூன்றாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்திலும், லண்டன் ஓவலில் நடந்த நான்காவது டெஸ்டில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் இந்தத் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராப்போர்ட் மைதானத்தில் இந்திய நேரப்படி நேற்று (செப்டம்பர்) மாலை 3.30 மணிக்கு தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த டெஸ்ட் போட்டி கொரோனா பாதிப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

லண்டன் ஓவலில் நடந்த நான்காவது டெஸ்ட் போட்டியின்போது இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரான 59 வயது ரவிசாஸ்திரிக்கு கடந்த சனிக்கிழமை கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர்கள் மூன்று பேரும் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றனர். அத்துடன் அணியின் பிசியோதெரபிஸ்ட் நிதின் பட்டேல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டார்.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் உதவி பிசியோதெரபிஸ்ட் யோகேஷ் பார்மருக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருப்பது உறுதியானது. அவர் இந்திய அணி வீரர்களுடன் நெருங்கி பணியாற்றியதால் அணியினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அத்துடன் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நடைமுறைப்படி இந்திய அணியினர் அனைவரும் ஹோட்டல் அறையில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர்.

இதனால் இந்திய அணியினர் யாரும் பயிற்சியில் ஈடுபடவில்லை. பயிற்சி மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு அதிரடியாக ரத்து செய்யப்பட்டது. அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்பது குறித்து இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியங்கள் ஆலோசனை நடத்தி வந்தது.

ஆனால், இந்திய அணியினருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் யாருக்கும் கொரோனா இல்லை என சோதனை முடிவுகள் வெளியானது. இருந்தாலும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியை ரத்து செய்வதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

இந்த டெஸ்ட் தொடரில் இந்தியா 2:1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. ஐந்தாவது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டதால் தொடரை இந்தியா கைப்பற்றியுள்ளது.

இந்த நிலையில் இந்த மாதம் செப்டம்பர் 19ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் துபாயில் ஆரம்பிக்கும் நிலையில் இங்கிலாந்து போட்டியின் மூலம் இந்திய வீரர்கள் பலருக்கும் கொரோனா பரவினால் அது ஐபிஎல் போட்டிகளை பாதிக்கும் என பிசிசிஐ தனது கவலையை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்திருக்கிறது.

இரு நாடுகளுக்கு இடையேயான தொடரைவிட ஐபிஎல்லுக்கு பிசிசிஐ நிர்வாகம் முக்கியத்துவம் தருவது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் ‘ஐந்தாவது டெஸ்ட் போட்டி நடக்கவில்லையென்றால் எங்களுக்கு ஏற்படும் வருமான இழப்பான 304 கோடி ரூபாயை பிசிசிஐ தர வேண்டும். அதோடு ஐந்தாவது டெஸ்ட்டில் இருந்து வாக் ஓவர் கொடுத்ததாக அறிவித்து தொடர் 2-2 என சமநிலையில் முடிந்ததாக ஏற்றுக்கொள்ளவேண்டும்’’ என ECB (இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்) சொல்லியிருக்கிறது.

-ராஜ்

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

சனி 11 செப் 2021