மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 10 செப் 2021

அண்ணாத்த முதல் பார்வை!

அண்ணாத்த முதல் பார்வை!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் அண்ணாத்த. நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, யோகி பாபு, ஜெகபதி பாபு உள்ளிட்ட ஏகப்பட்ட திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

கொரோனா உள்ளிட்ட பிரச்னைகளால் இரண்டு ஆண்டுகாலமாக தாயாரிப்பில் இருந்து வந்த அண்ணாத்த படப்பிடிப்பு முடிவடைந்திருக்கிறது.

தீபாவளி வெளியீடு என்று ஏற்கனவே தயாரிப்பு தரப்பு அதிகாரபூர்வமாக அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றனர். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று காலை 11 மணிக்கு அண்ணாத்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டது. திருவிழா பின்னணியில் கோயில் மணிகள், அரிவாள்கள் நிறைந்து இருக்க, பட்டு வேஷ்டி, சட்டையில் கூலிங் கிளாஸ் அணிந்து ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ளார் ரஜினி.

அஜீத்குமார் நடிப்பில் சிவா இயக்கத்தில் வெளியான விஸ்வாசம் போன்று கிராமம் சார்ந்த திரைக்கதையாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இன்று மாலை அண்ணாத்த படத்தின் மோஷன் போஸ்டரும் வீடியோவும் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

-இராமானுஜம்

கார்த்தி முடிவால் வட்டியில் சிக்கிய தயாரிப்பாளர்!

4 நிமிட வாசிப்பு

கார்த்தி முடிவால் வட்டியில் சிக்கிய தயாரிப்பாளர்!

வெங்கட்பிரபுவுடன் ஜோடி சேர்ந்த சினேகா

2 நிமிட வாசிப்பு

வெங்கட்பிரபுவுடன் ஜோடி சேர்ந்த சினேகா

பொன்னியின் செல்வன் ‘வந்தியதேவன்’ புறப்பட்டார்!

2 நிமிட வாசிப்பு

பொன்னியின் செல்வன் ‘வந்தியதேவன்’ புறப்பட்டார்!

வெள்ளி 10 செப் 2021