மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 10 செப் 2021

ஒரே நாளில் ஆர்யாவின் இரு படங்கள் ரிலீஸ்!

ஒரே நாளில் ஆர்யாவின் இரு படங்கள் ரிலீஸ்!

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால், ஆர்யா, பிரகாஷ்ராஜ், மிருணாளினி, மம்தா மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'எனிமி'.

இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் படம் ஆயுத பூஜை விடுமுறையைக் கணக்கில் கொண்டு அக்டோபர் 14ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.

சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா, சுந்தர்.சி, ஆண்ட்ரியா, விவேக், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகியுள்ள படம் அரண்மனை 3 நீண்ட நாட்களாக இந்தப் படம் தயாரிப்பில் உள்ளது.

இந்தப் படத்தினை அக்டோபர் 14-ம் தேதி வெளியிடலாம் என்று திட்டமிட்டு விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கியுள்ளது.

ஆனால், தேதியை அதிகாரபூர்வமாக அறிவிக்காமல் விநியோகஸ்தர்கள் மட்டத்தில் பேசி முடிவு செய்யப்பட்டிருந்தது

இந்த நிலையில் எனிமி பட தயாரிப்பாளர் தரப்பு ஆயுதபூஜை அன்று நாங்கள் வருகிறோம் என்பதை அதிகாரபூர்வமாக அறிவித்தது கண்டு அரண்மனை - 3 தயாரிப்பாளர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

தீபாவளி அன்று அண்ணாத்த, வலிமை படங்கள் ரீலீஸ் ஆவதால்அக்டோபர்

14-ம் தேதியை விட்டுவிட்டால் வேறு நல்லதொரு தேதி கிடைக்காது. இதே தேதியில் வெளியிட்டுவிடலாம் என்று 'அரண்மனை 3' படக்குழு தற்போது முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. அவ்வாறு வெளியிடப்பட்டால் ஒரே தேதியில் இரண்டு ஆர்யா படங்கள் வெளியாகும் சூழல் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

-இராமானுஜம்

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

6 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

நடிகர்களை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா மந்தனா

3 நிமிட வாசிப்பு

நடிகர்களை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா மந்தனா

வாகா எல்லையில் நடிகர் அஜித்

2 நிமிட வாசிப்பு

வாகா எல்லையில் நடிகர் அஜித்

வெள்ளி 10 செப் 2021