மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 10 செப் 2021

தீபாவளிக்கு அண்ணாத்த - வலிமை நேரடி மோதல்?

தீபாவளிக்கு அண்ணாத்த - வலிமை நேரடி மோதல்?

ரஜினிகாந்த் நடித்த பேட்ட படமும், அஜித் நடித்த விஸ்வாசம் படமும் 2019ஆம் வருடம் ஒரே நாளில் வெளியானது.

இதில் விஸ்வாசம் வசூல் அடிப்படையில் முதல் இடத்தை பிடித்தது. இந்த நிலையில் வருகிற தீபாவளிக்கு ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படமும், அஜித் நடித்த வலிமை படமும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் திரையரங்குகள் வட்டாரம் மகிழ்ச்சியில் உள்ளது.

ஒரு படம் என்றால் அதிகமான முன்தொகை அல்லது மினிமம் கேரண்டி தொகை கொடுக்க வேண்டியிருக்கும். இரண்டு படங்கள் வெளிவரும்போது இந்த நெருக்கடி இருக்காது . தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரைகளிலும் புதிய படங்கள் திரையிடும் வாய்ப்பு கிடைக்கும்.

இந்த நிலையில் விஸ்வாசம் படத்தை இயக்கிய சிறுத்தை சிவா தான் அண்ணாத்த படத்தை இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் ஏற்கெனவே அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் உருவாகிவரும் வலிமை படத்தில் ஹீமா குரேஷி, கார்த்திகேய கும்மகொண்டா, யோகி பாபு உள்பட பலர் நடிக்கிறார்கள். படப்பிடிப்பும் முடிந்துவிட்டது. அதற்கு பிந்தைய பணிகள் நடந்து வருகிறது. இந்தப் படம் ஆயுத பூஜை தினத்தன்று (அக்டோபர் 14) வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் 50 சதவிகித இருக்கைக்கு மட்டும் அனுமதி இருப்பதால் அஜித் படங்களுக்கே உரிய ஓப்பனிங் கலெக்‌ஷன் பாதிக்கும் என்பதால் படத்தை ஆயுத பூஜைக்கு வெளியிட தயாரிப்பாளரும் விநியோகஸ்தர்களும் தயங்குவதாகத் தெரிகிறது. ஏனென்றால் தமிழக விநியோக உரிமை சுமார் 60 கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்யப்பட்டிருப்பதால் சுமார் 120 கோடி ரூபாய் வசூலை திரையரங்குகள் டிக்கட் விற்பனை மூலம் எடுத்தாக வேண்டிய நெருக்கடியில் உள்ள படம் வலிமை.

தமிழகத்தின் ஆளும்கட்சி குடும்ப நிறுவனமான சன் பிக்சர்ஸ் தயாரிப்பு தான் அண்ணாத்த. அதனால் தீபாவளியை ஒட்டி 100 சதவிகித இருக்கைக்கு அனுமதிக்கப்படும் என்று தெரிகிறது. அதனால் வலிமை படத்தையும் தீபாவளி அன்று வெளியிட தயாரிப்பாளர் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

-இராமானுஜம்

அரண்மனை 3 படத்தை வாங்கிய உதயநிதி

4 நிமிட வாசிப்பு

அரண்மனை 3 படத்தை வாங்கிய உதயநிதி

ரூ.10 கோடியில் நடிகர் சங்கத்துக்கு கட்டிடம்: பிரகாஷ் ராஜ்

2 நிமிட வாசிப்பு

ரூ.10 கோடியில் நடிகர் சங்கத்துக்கு கட்டிடம்: பிரகாஷ் ராஜ்

ஆட்டிசம் பாதித்த பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ்

3 நிமிட வாசிப்பு

ஆட்டிசம் பாதித்த பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ்

வெள்ளி 10 செப் 2021