மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 10 செப் 2021

தலைவி திரையரங்கு வசூலுக்குத் தலைமை ஏற்குமா?

தலைவி திரையரங்கு வசூலுக்குத் தலைமை ஏற்குமா?

புத்தாண்டு தொடக்கத்தில் திரையரங்குகளுக்கு நம்பிக்கை கொடுத்த படங்கள் மாஸ்டர், ஈஸ்வரன், சுல்தான் ஆகிய படங்கள் மட்டுமே. மீண்டும் இரண்டாம் சுற்று கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டது.

2021 ஆகஸ்ட் மூன்றாவது வாரம் திரையரங்குகள் திறப்பிற்கு அனுமதி வழங்கப்பட்டது. நட்சத்திர அந்தஸ்துடன் கூடிய படங்கள் எதுவும் வெளியிட தயாராக இல்லாத நிலையில் செப்டம்பர் 3 அன்று 40 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான எம்.ஜி.ராமச்சந்திரன் நடித்த உலகம் சுற்றும் வாலிபன் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி டிஜிட்டல் வடிவில் திரையிடப்பட்டது

தமிழகம் முழுவதும் சுமார் 1 கோடி ரூபாய் முன்பணமாக பெறப்பட்டு விநியோக முறையில் வியாபாரம் செய்யப்பட்ட இந்தப் படம் வசூல் ரீதியாக வெற்றிபெறவில்லை இன்று( 10.9.2021) எம்.ஜி.ஆர் வளர்ப்பான முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு எனக் கூறப்படும்" தலைவி" திரைப்படம் தமிழகத்தில் சுமார் 350 திரைகளில் வெளியிடப்படுகிறது

இந்தி நடிகை கங்கணா ரணாவத் ஜெயலலிதாகவாகவும் எம்.ஜி.ஆராக அரவிந்தசாமியும் ஆர்.எம்.வீரப்பனாக சமுத்திரகனியும், மு.கருணாநிதியாக நாசர் ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்தை ஏ.எல்.விஜய் இயக்கி உள்ளார்.

படம் வெளியாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே ஊடக விமர்சனத்திற்கு தலைவி படம் திரையிடப்பட்டுள்ளது வழக்கம்போலவே எதிர்ப்பு - ஆதரவு என்பது சமபலத்தில் சமூக வலைத்தளங்களில் எதிரொலிக்கிறது.

சமீப காலங்களாக ஊடக விமர்சனங்கள் திரைப்படத்தின் வெற்றிதோல்வியை பாதிக்கவில்லை படம் பார்க்கும் ரசிகன் படங்களுக்கு விமர்சகர்கள் வழங்கும் மதிப்பெண்களும், நட்சத்திரங்களும் கைமாறும் கரன்சியை பொறுத்து வழங்கப்படுகிறது என்பதை பொதுவெளியில் பதிவு செய்ய தொடங்கிவிட்டனர் .

இதனால் தலைவி படத்தின் வெற்றி என்பது முதல் நாள் படம் பார்க்கும் ரசிகனின் திருப்தி, விமர்சனத்தை பொறுத்தே இருக்கிறது. எம்.ஜி.ஆர் ரசிகர்கள், ஜெயலலிதாவின் விசுவாசம் மிக்கதொண்டர்களும்" தலைவி" படத்தை நம்பிக்கையுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் .

உலகம் சுற்றும் வாலிபன் படம் திரையிட்ட பல திரையரங்குகளில் அதிமுகவினர் தோரணம் கட்டி, மொத்த டிக்கெட்டையும் வாங்கி ரசிகர்களுக்கு இலவசமாக வழங்கி முதல் நாள் மட்டும் கொண்டாடினார்கள்.

அதேபோன்ற ஆரவாரம் தலைவி படத்துக்கும் இருக்கிறது என்கிறது தியேட்டர் வட்டாரம் சுமார் எட்டு கோடி ரூபாய் அளவுக்கு தமிழக விநியோக உரிமை வியாபாரமாகியிருக்கும்" தலைவி" வசூல் ரீதியாக திரையரங்குகளுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் தலைமை தாங்குமா என்று ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் எதிர்பார்த்து காத்திருக்கிறது.

-இராமானுஜம்

ஷாருக்கான் மகனால் பாதிக்கப்பட்ட கலைஞர்கள்!

3 நிமிட வாசிப்பு

ஷாருக்கான் மகனால் பாதிக்கப்பட்ட கலைஞர்கள்!

என் தகப்பன்: நெடுமுடி வேணு பற்றி மம்மூட்டி உருக்கம்!

6 நிமிட வாசிப்பு

என் தகப்பன்: நெடுமுடி வேணு பற்றி  மம்மூட்டி உருக்கம்!

நாகேஷுக்கும் வாலிக்கும் உதவியவர்: ஸ்ரீகாந்த் பற்றி சிவகுமார் ...

3 நிமிட வாசிப்பு

நாகேஷுக்கும் வாலிக்கும் உதவியவர்: ஸ்ரீகாந்த் பற்றி சிவகுமார்

வெள்ளி 10 செப் 2021