மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 9 செப் 2021

மகேஷ் பாபுவுக்கு வில்லனாகும் சஞ்சய் தத்

மகேஷ் பாபுவுக்கு வில்லனாகும் சஞ்சய் தத்

இந்தி திரையுலகில் கதாநாயகனாக கொடிகட்டிப் பறந்தவர்கள் எல்லாம் வயது காரணமாக தங்களுக்கு ஏற்ற கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கிவிட்டனர். 70 வயது ஆனாலும் கதாநாயகனாகத்தான் நடிப்பேன் என்று தமிழ் சினிமா கதாநாயகர்கள் போன்று அடம் பிடிப்பதில்லை.

இந்தியில் முன்னணி நாயகர்களாக இருந்தவர்களை தென்னிந்திய சினிமாவுக்கு அழைத்து வந்து வில்லனாக நடிக்க வைப்பது இப்போது புது டிரெண்டாகவே மாறிவிட்டது. இந்தியில் அந்தப் படத்தை வெளியிடவும், வியாபாரம் செய்யவும் எளிதாக இருக்கிறது. அந்த வகையில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் தற்போது கேஜிஎஃப் 2 படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து தெலுங்கில் சஞ்சய் தத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் த்ரிவிக்ரம் சீனிவாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு அடுத்ததாக நடிக்க உள்ள படத்தில் வில்லனாக நடிக்க சஞ்சய் தத் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது, கதாநாயகிகளாக பூஜா மற்றும் நபா நடேஷ் இருவரும் நடிக்க உள்ளார்களாம்.

-இராமானுஜம்

பேரு வச்சாலும் பாடல்... ரகசியத்தைப் பகிர்ந்த இளையராஜா

3 நிமிட வாசிப்பு

பேரு வச்சாலும் பாடல்... ரகசியத்தைப் பகிர்ந்த இளையராஜா

உதயநிதி படத்தில் வடிவேலு?

3 நிமிட வாசிப்பு

உதயநிதி படத்தில் வடிவேலு?

வடிவேலு படத் தலைப்பு: சிவகார்த்திகேயன் கருத்து!

3 நிமிட வாசிப்பு

வடிவேலு படத் தலைப்பு: சிவகார்த்திகேயன் கருத்து!

வியாழன் 9 செப் 2021