மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 9 செப் 2021

மோகன்லாலுடன் இணையும் ஷாஜி கைலாஷ்

மோகன்லாலுடன் இணையும் ஷாஜி கைலாஷ்

மலையாளத் திரையுலகில் முதல் இடத்தில் இருக்கும் கமர்ஷியல் இயக்குநர் ஷாஜி கைலாஷ். தமிழில் அஜித்குமார் நடித்த ஜனா, விஜயகாந்தின் வாஞ்சிநாதன் மற்றும் நடிகர் ஆர்.கேவை வைத்து எல்லாம் அவன் செயல் உட்பட சில படங்களை இயக்கியுள்ளார்.

இடையில் கடந்த சில வருடங்களாக பட வாய்ப்புகள் இன்றி தடுமாறியவர், தற்போது மீண்டும் மலையாள முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்தவகையில் சுரேஷ் கோபி நடிப்பில் கடுவா என்கிற படத்தை இயக்கி முடித்துவிட்டார்.

இந்தப் படம் ரிலீஸாவதற்கு முன்பாகவே மோகன்லாலை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கவுள்ளார் ஷாஜி கைலாஷ். இதற்கான அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ள மோகன்லால், “பன்னிரண்டு வருடங்கள் கழித்து நாங்கள் மீண்டும் இணைகிறோம்... நீண்ட நாள் காத்திருப்பு நிச்சயம் உங்கள் எதிர்பார்ப்பை வீணாக்காது, வரும் அக்டோபர் மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது” எனக் கூறியுள்ளார்.

கடந்த 2009இல் இவர்கள் கூட்டணியில் கடைசியாக ரெட் சில்லிஸ் என்கிற படம் வெளியானது. அதற்கு முன்னதாக பாபா கல்யாணி, நாட்டு ராஜா, ஆறாம் தம்புரான் என மோகன்லாலுக்குப் பல ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார் இயக்குநர் ஷாஜி கைலாஷ்.

-இராமானுஜம்

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

வியாழன் 9 செப் 2021