மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 9 செப் 2021

தமிழ் சினிமாவுக்கு லாபக் கணக்கைத் தொடங்குமா லாபம்?

தமிழ் சினிமாவுக்கு லாபக் கணக்கைத் தொடங்குமா லாபம்?

எந்த தொழில் தொடங்கினாலும் 'லாபம்' என்கிற வாசகம் கணக்கு நோட்டில் அல்லது அலுவலகச் சுவரில் எழுதப்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாக தமிழகத்தில் உள்ளது.

கொரோனா இரண்டாவது அலையால் 2021 ஏப்ரல் மாதம் மூடப்பட்ட தியேட்டர்கள் கடந்த மாதக் கடைசியில் மீண்டும் திறக்கப்பட்டன. கடந்த இரண்டு வாரங்களாக மக்களை தியேட்டருக்கு அழைத்து வரக்கூடிய படங்களாக எதுவும் இல்லாமல் போனது.

இந்த வாரத்தில் இன்று (செப்டம்பர் 9) விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடித்துள்ள 'லாபம்', நாளை செப்டம்பர் 10ஆம் தேதி கங்கனா ரணாவத், அரவிந்த்சாமி மற்றும் பலர் நடித்துள்ள 'தலைவி' ஆகிய படங்கள் தியேட்டர்களில் வெளியாகின்றன.

இந்தப் படங்களுக்கான முன்பதிவு கடந்த இரு நாட்களாக ஆரம்பமாகி நடைபெற்று வந்தது. சில மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் மட்டும் மாலை காட்சிகளுக்கு சுமாராகவும், இரவு நேரக் காட்சிகளுக்கு மிகச் சுமாராகவும், பகல் நேரக் கட்சிகளுக்கு மிக மிகச் சுமாராகவும் முன்பதிவு நடைபெற்றிருந்தது

இந்தச் சூழ்நிலையில் தமிழ் சினிமாவில் மக்கள் நலன் சார்ந்து இயற்கை, பேராண்மை, ஈ,

பெறம்போக்கு என்கிற பொதுவுடமை போன்ற இடதுசாரி சிந்தனைகளை உரக்க பேசிய படங்களை இயக்கிய எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய லாபம் திரைப்படம் சுமார் 400 திரைகளில் தமிழகத்தில் இன்று வெளியாகிறது

நடிகர் விஜய் சேதுபதி - எஸ்.பி.ஜனநாதன் கூட்டணிக்கு என்று தமிழகத்தில் சினிமா ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது கடந்த 20 மாதங்களுக்கு மேலாக மூடிக்கிடக்கும் தியேட்டர்களுக்கு இந்த ரசிகர்கள் கூட்டம் உத்வேகத்துடன் வருவார்கள் என்கிற ஆர்வம் மேலோங்கிட லாபம் படத்தை திரையரங்குகளில் திரையிடத் திரையரங்க உரிமையாளர்கள் ஒப்பந்தம் செய்துள்ளனர்

ரசிகர்களின் வருகை என்பது தியேட்டர்களின் வசூலுக்கு மட்டுமல்ல; தமிழ் சினிமாவை உயிர்ப்புடன் இயங்க செய்யக்கூடிய ஆக்சிஜனும் அதுதான் என்கின்றனர் விநியோகஸ்தர்கள்.

என்னதான் நவீன தொழில்நுட்ப வளர்ச்சியில் வலைதளங்களில் புதிய படங்களை வீட்டில் ஹோம் தியேட்டர், தொலைக்காட்சி பெட்டி, கைபேசிகளில் பார்த்தாலும் திரையரங்கில் குடும்பத்துடன், நண்பர்களுடன் கை தட்டி சிரித்து பார்க்கும் அனுபவம் அலாதியானது. அதை கொரோனா தொற்று பயம் காரணமாக மக்கள் தற்காலிகமாக தவிர்த்து வந்தனர். லாபம் திரைப்படம் அந்தத் தடையைத் தகர்த்து தமிழ் சினிமாவை புத்துயிர்ப்புடன் லாபகரமாக இயங்குவதை விஜய் சேதுபதி நடித்துள்ள 'லாபம்' திரைப்படம் தொடங்கிவைக்கும் என்கின்றனர் தயாரிப்பாளர்கள் வட்டாரத்தில்.

-இராமானுஜம்

புதிய ஐபிஎல் அணிகள்: சர்ச்சைப் பின்னணி!

7 நிமிட வாசிப்பு

புதிய ஐபிஎல் அணிகள்:  சர்ச்சைப் பின்னணி!

சமந்தாவுக்கு உதவும் ஷில்பா ஷெட்டி வழக்கின் தீர்ப்பு!

3 நிமிட வாசிப்பு

சமந்தாவுக்கு உதவும் ஷில்பா ஷெட்டி வழக்கின் தீர்ப்பு!

டி20 உலகக் கோப்பை: இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்த பாகிஸ்தான்! ...

3 நிமிட வாசிப்பு

டி20 உலகக் கோப்பை: இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்த பாகிஸ்தான்!

வியாழன் 9 செப் 2021