மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 9 செப் 2021

சிரஞ்சீவி ஆசையை நிறைவேற்றிய ராம்சரண்

சிரஞ்சீவி ஆசையை நிறைவேற்றிய ராம்சரண்

தெலுங்கு சினிமாவில் கால் நூற்றாண்டு கால உச்ச நட்சத்திரமாக இருப்பவர் சிரஞ்சீவி எத்தனையோ பிரம்மாண்டமான படங்களில் நடித்திருந்தாலும் ஷங்கர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது அவரது விருப்பமாக இருந்தது. ஆனால் அது நிறைவேறாமல் கானல் நீராகி போனது . அவரது கனவு தனது மகன் மூலம் நிறைவேறி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார் சிரஞ்சீவி.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண், கியாரா அத்வானி, ஜெயராம், சுனில், நவீன் சந்திரா உள்ளிட்ட பலர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நேற்று பூஜையுடன் தொடங்கி உள்ளது. தில்ராஜ் தயாரிக்கிறார்.

இது தொடர்பாக சிரஞ்சீவி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் , “சில படங்கள் தொடக்கத்திலிருந்தே சிறப்பானதாக அமையும். இதுவும் அப்படியான ஒன்று. ஷங்கருடன் பணிபுரிவது எனக்கு ஒரு கனவாக இருந்து வந்தது.

ராம் சரண் மூலம் அக்கனவு நனவாகி இருக்கிறது. அவர்கள் படம் இன்று தொடங்கியுள்ளது. கியாரா அத்வானி, தில் ராஜு உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.

-இராமானுஜம்

யோகிபாபுவுக்கு நன்றி சொன்ன விவேக் மகள்!

2 நிமிட வாசிப்பு

யோகிபாபுவுக்கு நன்றி சொன்ன விவேக் மகள்!

ஐபிஎல்: கோலி அணியை வீழ்த்திய டோனி அணி!

5 நிமிட வாசிப்பு

ஐபிஎல்: கோலி அணியை வீழ்த்திய டோனி அணி!

ஒன்றிய அரசுக்கு பயப்படும் விஜய்: தயாரிப்பாளர் கே.ராஜன்

3 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசுக்கு பயப்படும் விஜய்: தயாரிப்பாளர் கே.ராஜன்

வியாழன் 9 செப் 2021