மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 9 செப் 2021

'சந்திரமுகி - 2'ல் வடிவேலு நடிக்கிறாரா?

'சந்திரமுகி - 2'ல் வடிவேலு நடிக்கிறாரா?

இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடித்து வந்தார் நடிகர் வடிவேலு.

படப்பிடிப்பு தளத்தில் சிம்புதேவன் - வடிவேலு இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக படப்பிடிப்புக்கு ஒப்புக்கொண்ட அடிப்படையில் வடிவேலு வரவில்லை. இதன் காரணமாக படப்பிடிப்பைத் தொடர முடியவில்லை

இதனால் தனக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டதாக வடிவேலு மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தார் ஷங்கர். இதுகுறித்த பஞ்சாயத்துக்கள் நடந்து வந்ததால் வடிவேலு சில காலம் படத்தில் நடிக்காமல் இருந்தார்.

சமீபத்தில் இந்தப் பட பிரச்னை தீர்ந்ததால் மீண்டும் படங்களில் நடிக்க உள்ளார் வடிவேலு. முதலாவதாக சுராஜ் இயக்கும் படத்தில் நடிப்பதற்கு தயாராகி வருகிறார். இதை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த நிலையில் வடிவேலு காமெடியனாக நடித்த படங்களில் பி.வாசு இயக்கத்தில் ரஜினி நடித்த சந்திரமுகி முக்கியமான படம். இந்தப் படத்தில் ரஜினியுடன் வடிவேலு இணைந்து நடித்த காமெடி காட்சிகள் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டன. தற்போது வாசு இயக்கும் சந்திரமுகி - 2 படத்தில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிப்பதாக செய்திகள் ஏற்கனவே வெளியானது

இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்க இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், சந்திரமுகி படத்தின் முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகத்திலும் வடிவேலு முக்கிய காமெடியனாக இடம்பெறும் வகையில் திரைக்கதையில் மாற்றங்கள் தற்போது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அத்துடன் முதல் பாகத்துக்கு எந்த வகையிலும் குறைவில்லாத வகையில் வடிவேலுவுக்கான காமெடி காட்சிகள் இருக்க வேண்டும் என்று அவரது பரம ரசிகரான கதாநாயகன் ராகவா லாரன்ஸ் இயக்குநரிடம் வேண்டுகோள் வைத்திருக்கிறாராம்.

-இராமானுஜம்

விருதுகளை அள்ளிய அசுரன்!

2 நிமிட வாசிப்பு

விருதுகளை அள்ளிய அசுரன்!

கார்த்தி முடிவால் வட்டியில் சிக்கிய தயாரிப்பாளர்!

4 நிமிட வாசிப்பு

கார்த்தி முடிவால் வட்டியில் சிக்கிய தயாரிப்பாளர்!

ஐபிஎல்: மும்பையை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ்!

6 நிமிட வாசிப்பு

ஐபிஎல்: மும்பையை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ்!

வியாழன் 9 செப் 2021