மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 9 செப் 2021

சமாளிப்பு ஷங்கர்... சமாதானமடையாத சுபாஷ்கரன்

சமாளிப்பு ஷங்கர்... சமாதானமடையாத சுபாஷ்கரன்

இயக்குநர் ஷங்கர் மற்றும் ராம் சரண் முதன்முறையாக இணையும் படத்தின் தொடக்க நிகழ்வு நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது.

இந்தப் படத்தின் ஆரம்பக் கட்டப் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. செப்டம்பர் மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்பட்டு வந்தது.

நேற்று காலை நடைபெற்ற தொடக்க நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக ராம் சரணின் தந்தை சிரஞ்சீவி, இயக்குநர் ராஜமௌலி, இந்தி நடிகர் ரன்வீர் சிங், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ராம் சரண், தேஜா ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாக உள்ளது.

முன்னதாக, கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை வந்த லைகா நிறுவனர் சுபாஷ்கரனுடன் நடந்த சந்திப்பின்போது இந்தியன் 2 படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு இந்தப் படத்துக்குப் போவதாக இயக்குநர் ஷங்கர் கூறியிருந்தார்.

அதன்படி, கமல் பங்கு பெறாத காட்சிகளின் படப்பிடிப்பை உடனடியாகத் தொடங்கத் திட்டமிட்டு வேலைகளை லைகா நிறுவனம் தொடங்கியிருந்திருக்கிறது. அந்த வேலைகள் நடந்துகொண்டிருக்கும்போதே ராம் சரண் படத்துக்கான தொடக்க விழா நடைபெற்றிருக்கிறது.

தன்னிடம் கொடுத்த உறுதிமொழிக்கு மாறாக இந்தப் படம் தொடங்கப்பட்டதால் சுபாஷ்கரன் கோபமாகி விட்டாராம். லைகா நிறுவனத்தினர் ஷங்கரிடம் இதுபற்றிக் கேட்டபோது, இது ஏற்கெனவே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி, பூஜை மட்டும்தான் போடுகிறோம். படப்பிடிப்பு தாமதமாகும் என்று சமாதானம் சொல்லியிருப்பதாகக் கூறப்படுகிறது.

-இராமானுஜம்

அரண்மனை 3 படத்தை வாங்கிய உதயநிதி

4 நிமிட வாசிப்பு

அரண்மனை 3 படத்தை வாங்கிய உதயநிதி

ரூ.10 கோடியில் நடிகர் சங்கத்துக்கு கட்டிடம்: பிரகாஷ் ராஜ்

2 நிமிட வாசிப்பு

ரூ.10 கோடியில் நடிகர் சங்கத்துக்கு கட்டிடம்: பிரகாஷ் ராஜ்

ஆட்டிசம் பாதித்த பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ்

3 நிமிட வாசிப்பு

ஆட்டிசம் பாதித்த பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ்

வியாழன் 9 செப் 2021