லாபம் வியாபார நிலவரம்!

entertainment

இந்தியாவில் கொரோனா ஊரடங்கு காரணமாக முடங்கிய திரைப்பட தொழில், திரையரங்குகள் அனைத்தும் இந்த வருடம் ஜனவரி மாதம் மீண்டும் இயங்கத் தொடங்கியது இரண்டாம் அலை கொரோனா தொற்று காரணமாக மீண்டும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்தியா முழுவதும் முழுமையாக திரைப்பட தொழில் தனது முந்தைய நிலைமைக்கு மீண்டு வரவில்லை மகாராஷ்ட்ரமும், கேரளாவிலும் திரையரங்குகளை திறக்க அனுமதிக்கப்படவில்லை

தமிழ் திரைப்படங்கள் இந்தியா, மற்றும் வெளிநாடுகளில் வியாபாரமாக கூடியவை. அதற்கு ஏற்பவே படத்தின் பட்ஜெட் தீர்மானிக்கப்படுகிறது. அந்த வகையில் தயாரிக்கப்பட்ட படம்தான் லாபம்.

விஜய்சேதுபதி புரடெக்ஷன்ஸ் மற்றும்7C எண்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்திருக்கும் லாபம் படத்தில் விஜய்சேதுபதி, ஸ்ருதிஹாசன், ஜெகபதிபாபு, கலையரசன் மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு இமான் இசையமைத்திருக்கிறார் தமிழ் சினிமாவில் மக்கள் நலன் சார்ந்த இயக்குநராக அறியப்பட்ட எஸ்.பி.ஜனநாதன் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி உள்ளார்

லாபம் படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் ஈடுபட்டிருந்தபோது இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் உடல் நலக்குறைவு ஏற்பட்டு அகால மரணமடைந்தார். அவரது உதவியாளர்கள் இறுதிக்கட்ட பணிகளை முடித்துள்ளனர்.

மாஸ்டர், சுல்த்தான், ஈஸ்வரன் படங்களுக்கு பின் இந்த வருடம் திரையரங்கில் திரையிடப்படும் படங்களில் லாபம் முதலாவதாக நாளை வெளியாகிறது. வியாபார முக்கியத்துவம் உள்ள நாயகன் விஜய்சேதுபதி நடித்திருக்கும் இப்படத்தின் வியாபாரம் எப்படி?…

விஜய்சேதுபதி நடித்து வெளியாகும் படங்களின் உரிமைகள் அவுட்ரேட் அடிப்படையில் வியாபாரமாகிவிடும். அந்த அடிப்படையில் லாபம் படம் வியாபாரமாகியிருக்கிறது. ஆனால் எதிர்பார்த்த அளவு இல்லை.

செங்கல்பட்டு, வட ஆற்காடு – தென் ஆற்காடு, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, கோயம்புத்தூர் ஏரியா உரிமைகள் விற்பனை மூலம் சுமார் 6 கோடி ரூபாய் கிடைத்துள்ளது, சேலம், சென்னை இரண்டு ஏரியாவும் தயாரிப்பாளர் படத்தை வெளியிடுகின்றார். படத்தின் மொத்த பட்ஜெட்டில் 60% தமிழக திரையரங்குகளில் ஆகும் வசூல் மூலம் கிடைக்க வேண்டும். தற்போதைய சூழலில் மக்கள் திரையரங்கை நோக்கி வருவதே கேள்விக்குரியாக உள்ள நிலையில் எதிர்பார்க்கும் வசூல் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது.

**-இராமானுஜம்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *