மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 8 செப் 2021

பூஜையுடன் தொடங்கிய ஷங்கர்- ராம்சரண் இணையும் படம்!

பூஜையுடன் தொடங்கிய  ஷங்கர்- ராம்சரண் இணையும் படம்!

இந்தியன்-2 படத்தின் வேலைகள் தாமதம் ஆவதால் தெலுங்கில் படம் இயக்கும் வாய்ப்பு அவரை தேடி வந்தபோது ஒப்புக்கொண்டார் ஷங்கர். இந்தியன்-2 படத்தின் வேலைகளை முடித்து தராமல் வேறு புதிய படங்களை ஷங்கர் இயக்குவதற்கு தடைவிதிக்க வேண்டும் என கோரி நீதிமன்றத்தில் லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

சில சமரச பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. நீதிமன்றத்தில் இரு தரப்பும் பேசிக்கொண்டுள்ளோம் என தெரிவித்திருக்கிறார்கள். இந்த நிலையில்இயக்குனர் ஷங்கர், ராம் சரண் இணையும் தெலுங்கு படத்தின் பூஜை ஹைதராபாத்தில் நடந்து முடிந்துள்ளது.

இந்த பூஜையில் சிறப்பு விருந்தினர்களாக சிரஞ்சீவி, இயக்குனர் ராஜமெளலி பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். ஆர்சி 15 என தற்காலிகமாக அழைக்கப்படும் இப்படம் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் தயாரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

ராஜமெளலியின் 'ஆர்ஆர்ஆர்' படத்தில் ராம் சரண் நடித்து முடித்துள்ளார். இப்படம் வெளிவந்த பிறகு ராம் சரணின் மார்க்கெட் நிலவரம் இன்னும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதையும் கருத்தில் கொண்டு தான் ஷங்கர், ராம் சரண் படத்தை 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்க முடிவெடுக்கப்பட்டதாம்.

ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோரை மட்டுமே தனது படங்களுக்கு, இசையமைப்பாளர்களாக இதுவரை பயன்படுத்தி வந்த ஷங்கர், 'பாய்ஸ்' படத்தில் அவர் நடிகராக அறிமுகப்படுத்திய தமனை இந்தப் படத்திற்கு இசை அமைக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளார்.

தெலுங்கு படத்தை இயக்குவதற்கு பல்வேறு விட்டுக் கொடுத்தல், சமரசங்களுக்கு உட்பட்டே ஷங்கர் படத்தை இயக்குகிறார் என்பதை பட பூஜை பேனரில் அறிந்து கொள்ள முடிகிறது.

தமிழில் ஷங்கர் இயக்கிய அனைத்து படங்களிலும் ஷங்கர் இயக்கத்தில் என முன்னிலைப்படுத்தப்படும். கமல்ஹாசன், ரஜினிகாந்த் நடித்த படங்களில் இருவரது பெயர்களும் ஒரே நேர்கோட்டில் விளம்பரங்களில் பயன்படுத்தப்படும்.

ஆனால் தெலுங்குப்பட பூஜையில் ராம்சரண் பெயருக்கு கீழேயே பிரம்மாண்ட இயக்குநர் என தமிழ் சினிமாவில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஷங்கரின் பெயர் இடம்பெற்றுள்ளது.

-இராமானுஜம்

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

புதன் 8 செப் 2021