மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 7 செப் 2021

எம்.ஜி.ஆர் வழியைக் கடைப்பிடிக்கும் விஜய் சேதுபதி

எம்.ஜி.ஆர் வழியைக் கடைப்பிடிக்கும் விஜய் சேதுபதி

சினிமா உலகில் பல விசித்திரங்கள், உறவுமுறைகளில் மாற்றங்கள் இயல்பாக நடப்பது உண்டு.

தன் மகளாக நடித்த குழந்தை நட்சத்திரம் வளர்ந்து குமரியான பின் அவருடன் ஜோடியாக நடிக்கும் கலாச்சாரம் தமிழ் சினிமாவில் சர்வசாதாரணம்.

அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் குழந்தை நட்சத்திரமாக தன்னுடன் நடித்த மீனா என் ராசாவின் மனசிலே படத்தில் ராஜ்கிரண் உடன் கதாநாயகியாக நடித்தார். அதன்பின் ரஜினிகாந்த்துக்கு ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார். மருமகன் தனுஷ் உடன் ஜோடியாக நடித்த ஸ்ரேயாவுடன் சிவாஜி படத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். தன் மகன் பிரபு கதாநாயகனாக நடிக்க தொடங்கியபோது அவருடன் ஜோடியாக நடித்த அம்பிகா, ராதா ஆகியோருடன் பின்னாட்களில் ஜோடியாக நடித்துள்ளார் சிவாஜி கணேசன். ஆனால், விஜய் சேதுபதி அதிலிருந்து மாறுபட்டு ஒரு முடிவு எடுத்துள்ளது தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கில் 'உப்பெனா' என்ற படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்தார். சூப்பர் ஹிட்டான அந்தப் படத்தில் கீர்த்தி ஷெட்டி என்ற அறிமுக நடிகை விஜய் சேதுபதியின் மகளாக நடித்தார்.

தமிழில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க உள்ள ஒரு படத்துக்காக கீர்த்தி ஷெட்டியை அவரது ஜோடியாக நடிக்க வைக்க பேசி வைத்திருந்தார்களாம். ஆனால், அது பற்றி கேள்விப்பட்ட விஜய் சேதுபதி, தனக்கு மகளாக நடித்த நடிகையுடன் ஜோடியாக நடிக்க மாட்டேன். வேறு கதாநாயகியைப் பாருங்கள் என்று சொல்லிவிட்டாராம். இதுபற்றி கேள்விபட்ட கீர்த்தி ஷெட்டி அதிர்ச்சியடைந்தாராம்.

இருந்தாலும் விஜய் சேதுபதியின் இந்த முடிவு தெலுங்கு திரையுலகில் உள்ளவர்களுக்கு மிகவும் ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுபற்றி மூத்த இயக்குநர் ஒருவரிடம் கேட்டபோது, "விஜய் சேதுபதி நியாயமான முடிவுதான் எடுத்திருக்கிறார். எம்.ஜி.ஆர், சிவாஜி இருவரும் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்த நேரம் எஸ்.எஸ்.ராஜேந்திரன் காதல் மனைவி விஜயகுமாரியை எம்.ஜி.ஆர் உடன் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்துவிட்டு அவரிடம் தகவல் கூறினார்கள். விஜயகுமாரி என் நண்பன், தம்பியின் மனைவி அவரை என் காதலியாக சினிமாவுக்காக உருவகம் செய்து நடிக்க என்னால் முடியாது. அவருக்குக் கொடுத்த அட்வான்ஸ் அப்படியே இருக்கட்டும். வேறு படத்துக்கு அதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் அல்லது பணம் அவசரம் என்றால் எனது சம்பளத் தொகையில் பிடித்துக்கொள்ளுங்கள் என்றார். அவரது வழியை விஜய் சேதுபதி தொடர்கிறார்" என்றார்.

-இராமானுஜம்

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

செவ்வாய் 7 செப் 2021