மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 7 செப் 2021

ஷாருக் படத்துக்காக யோகிபாபு செய்த மாற்றம்!

ஷாருக் படத்துக்காக  யோகிபாபு செய்த மாற்றம்!

தமிழ் சினிமாவோட பிஸியான காமெடி நடிகர் யோகிபாபு. இவர் கைவசம் மட்டும் பத்துக்கு மேல் படங்கள் இருக்கிறது. அதோடு, தமிழின் முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் தவறாமல் இடம்பெறுகிறார் யோகிபாபு.

அஜித்தின் ‘வலிமை’ மற்றும் விஜய்யின் ‘பீஸ்ட்’ படங்களில் நடித்துவருகிறார் யோகிபாபு. பொதுவாக, எந்த படமாக இருந்தாலும் இரண்டு நாட்கள் அல்லது மூன்று நாட்களென மட்டுமே தேதி ஒதுக்குவார் . ஆனால், புது சர்ப்ரைஸாக ஒரு படத்துக்கு மொத்தமாக நடிக்கத் தேதியைக் கொடுத்து ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்.

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘பீஸ்ட்’. நாயகியாக பூஜா ஹெக்டே, வில்லனாக செல்வராகவன் நடிக்கும் இந்தப் படத்தில் காமெடி டிராக்கில் யோகிபாபு வருகிறார். இந்தப் படத்துக்காகத் தான் மொத்தமாகத் தேதியை ஒதுக்கி நடித்துக் கொடுக்கிறாராம் யோகிபாபு. அதற்கு காரணம் இருக்கிறதாம்.

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் பாலிவுட்டில் ஒரு படம் உருவாக இருக்கிறது. நயன்தாரா நாயகியாக நடிக்க இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. விரைவிலேயே படப்பிடிப்புத் துவங்க இருக்கிறது. இப்படத்தில் பெரும்பாலும் தமிழகத்தைச் சேர்ந்த தொழில் நுட்பக் கலைஞர்களே பணியாற்ற இருக்கிறார்களாம். அதோடு, புதிய தகவலாக ஷாருக்கானுடன் நடிக்க இருக்கிறார் யோகிபாபு.

ஷாருக் படத்துக்காக மொத்தமாகத் தேதியைத் தருமாறு கேட்டிருக்கிறார் அட்லீ. அதனால், விஜய் படத்தை முழுமையாக முடித்துவிட்டுச் சென்றால், ஷாருக் படத்தின் படப்பிடிப்பும் தடைப்படாது. அதனால், தான் விஜய் , ஷாருக் படத்துக்கு மொத்தமாக தேதிகளைக் கொடுத்து நடித்துக் கொடுக்க இருக்கிறாராம் யோகிபாபு.

சமீபகாலமாகத் தமிழ் நடிகர்கள் பலரும் பாலிவுட்டை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறார்கள் அல்லது பாலிவுட் ரசிகர்கள் தமிழக நடிகர்களை விரும்புகிறார்கள் என்று கூட கூறலாம். தமிழில் அசத்திவரும் யோகிபாபு, பாலிவுட்டில் என்ன செய்யப் போகிறார் என்பதே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

- தீரன்

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

12 நிமிட வாசிப்பு

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

மாறனின் படத்தைப் புகழ்ந்து தள்ளிய இயக்குநர்கள்!

4 நிமிட வாசிப்பு

மாறனின் படத்தைப் புகழ்ந்து தள்ளிய இயக்குநர்கள்!

சொந்தப்பட புரொமோஷனுக்கு மட்டும் போலாமா?: கே.ராஜன்

13 நிமிட வாசிப்பு

சொந்தப்பட  புரொமோஷனுக்கு மட்டும் போலாமா?: கே.ராஜன்

செவ்வாய் 7 செப் 2021