மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 7 செப் 2021

எஸ். ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் ‘நான் கடவுள் இல்லை’!

எஸ். ஏ.சந்திரசேகர் இயக்கத்தில்  ‘நான் கடவுள் இல்லை’!

ஆடிய காலும், பாடிய வாயும் சும்மா இருக்காது என்பார்கள். சட்டத்தின் இது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ தமிழ் சினிமாவில் 70 வயதை கடந்து இளமை துடிப்போடு இயங்கிக் கொண்டிருக்கும் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு பொருந்தும்.

மகன் விஜய் தமிழ் சினிமாவின் முதன்மை நட்சத்திரம் இருந்தபோதிலும் புதுமுகங்கள் நடிக்கும் படங்களை தயாரித்து இயக்குவது, தானே கதை நாயகனாக நடிப்பது என்பதில் தீவிரமாக செயல்பட்டு வரும் எஸ்.ஏ.சந்திரசேகர், அவரது இயக்கத்தில் 71ஆவது படமாக 'நான் கடவுள் இல்லை' படத்தை ஸ்டார் மேக்கர்ஸ் சார்பில் தயாரிக்கிறார்.

சமுத்திரக்கனி, பருத்திவீரன் சரவணன், எஸ்.ஏ. சந்திரசேகர், இனியா, சாக்க்ஷி அகர்வால், அபி சரவணன், யுவன் மயில்சாமி,ரோகினி,இமான்,மதுரை மாயக்கா, சிறுமி டயானா ஸ்ரீ ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு: மகேஷ்கே. தேவ்,

இசை: சித்தார்த் விபின்,

எடிட்டிங் பிரபாகர்: கலை வனராஜ்.

இப்படத்தில் நேர்மையும், தைரியமும் கொண்ட போலீஸ் அதிகாரியாக சமுத்திரக்கனி நடித்திருக்கிறார். அவரது பாத்திரம் வழக்கமானதாக இல்லாமல் புதுமையாக அதிரடியாக இருக்கும் என்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகர். வித்தியாசமான வில்லனாகப் பருத்திவீரன் சரவணன் நடித்துள்ளார்.

ஒரு காலத்தில் சட்டத்தின் நுணுக்கங்களை கையில் எடுத்துக்கொண்டு பரபரப்பான படங்களை இயக்கியவர் எஸ்.ஏ.சந்திரசேகர். அந்தக் காலத்தில் 'நான் சிவப்பு மனிதன்' என்ற பரபரப்பான படத்தை இயக்கி பெயர் பெற்றார். அதே பாணியில் இந்த 'நான் கடவுள் இல்லை' படத்தையும் இயக்கியிருப்பதாக கூறுகிறார் எஸ்.ஏ.சந்திரசேகர்.

-இராமானுஜம்

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

6 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

முதல்வர் வீட்டின் முன் உண்ணாவிரதம் இருப்பேன்: டி.ராஜேந்தர்

8 நிமிட வாசிப்பு

முதல்வர் வீட்டின் முன் உண்ணாவிரதம் இருப்பேன்: டி.ராஜேந்தர்

செவ்வாய் 7 செப் 2021