மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 6 செப் 2021

19 பதக்கங்களுடன் சாதனை படைத்த இந்தியா!

19 பதக்கங்களுடன் சாதனை படைத்த இந்தியா!

டோக்கியோ 16ஆவது பாரா ஒலிம்பிக் இந்தியாவுக்கு வரலாற்று சிறப்புமிக்கதாகவே அமைந்திருக்கிறது. ஒலிம்பிக்/பாரா ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியா இதுவரை வென்றிராத அளவுக்கு பதக்கங்களை வென்றிருக்கிறது. நிறைவு விழாவில் இந்திய வீராங்கனை அவனி லெஹரா தேசிய கொடியை ஏந்தி சென்றார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16ஆவது பாரா ஒலிம்பிக் போட்டிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் 24ஆம் தேதி தொடங்கி நடந்து வந்த நிலையில் நிறைவு விழா நேற்று (செப்டம்பர் 5) கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது. இந்த பாரா ஒலிம்பிக்கில் 163 நாடுகளைச் சேர்ந்த சுமார் 4,500 மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிக்காட்டினர்.

பெண்களுக்கான R-2 10 மீட்டர் ஏர் ரைஃபிள் துப்பாக்கி சுடும் போட்டியில் மொத்தமாக 249.6 புள்ளிகளைப் பெற்று தங்கப் பதக்கத்தை வென்றதோடு, உலக சாதனையையும் சமன் செய்திருக்கும் 19 வயதே ஆன அவனி லெஹரா தேசிய கொடியை ஏந்தி சென்றார்.

நடப்பு பாரா ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள் பதக்கங்களை வென்று குவித்து உள்ளனர். 1968 முதல் 2016 வரைக்கும் பாரா ஒலிம்பிக்கில் இந்தியா 4 தங்கங்களுடன் 12 பதக்கங்களை மட்டுமே வென்றிருந்த நிலையில், தற்போது இதுவரை இல்லாத வகையில், 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெங்கலம் உள்பட19 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது. குறிப்பாக துப்பாக்கி சுடுதலில் அவனி லெஹராவும், சிங்ராஜ் அதானாவும் இரட்டை பதக்கங்களை வென்று அசத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்த டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டிகள் இந்தியாவுக்கு வரலாற்று சிறப்புமிக்கதாகவே அமைந்திருக்கிறது. வெற்றிபெற்ற வீரர்களுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

-ராஜ்

பேரு வச்சாலும் பாடல்... ரகசியத்தைப் பகிர்ந்த இளையராஜா

3 நிமிட வாசிப்பு

பேரு வச்சாலும் பாடல்... ரகசியத்தைப் பகிர்ந்த இளையராஜா

உதயநிதி படத்தில் வடிவேலு?

3 நிமிட வாசிப்பு

உதயநிதி படத்தில் வடிவேலு?

வடிவேலு படத் தலைப்பு: சிவகார்த்திகேயன் கருத்து!

3 நிமிட வாசிப்பு

வடிவேலு படத் தலைப்பு: சிவகார்த்திகேயன் கருத்து!

திங்கள் 6 செப் 2021