மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 6 செப் 2021

பூஸ்டர் டோஸும் ஆட்டோவும்: அப்டேட் குமாரு

பூஸ்டர் டோஸும் ஆட்டோவும்: அப்டேட் குமாரு

ரெண்டு டோஸும் போட்டுகிட்டோம் னு தெம்பா இருந்தா புதுசா பூஸ்டர் டோஸ் போடணும்னு பீதியைக் கெளப்பிக்கிட்டு இருக்காங்களே... புது ஏரியாவுல ஆட்டோல போகும்போது இதோ வந்துடுச்சு சார் இதோ வந்துடுச்சு சார் சொல்லிக்கிட்டே ரொம்ப தூரம் போயிட்டு இருப்பாங்களே அது மாதிரில்ல இருக்குது...

நீங்க அப்டேட் பாருங்க

செங்காந்தள்

விதையில்லாப் பழங்களை உருவாக்கி பறவைகளின் மரம் வளர்த்தல் பண்பையும் கருக்கி விட்டான் மனிதன்...!!!

பர்வீன் யூனுஸ்

யூட்யூப் பார்த்து மனைவி செய்யும் பிரியாணியை விட, எதையுமே பார்க்காமல் அன்று அம்மா செய்த புளியோதரை பிரமாதமாய் இருந்தது.

தர்மஅடி தர்மலிங்கம்

சமஸ்கிருதம் அறிவை வளர்க்க உதவுகிறது: பிரதமர் மோடி!

அப்போ நீங்களும் இன்னும் சமஸ்கிருதம் படிக்கலை அப்படி தான ஜி.

ச ப் பா ணி

எந்த App லும் விளம்பரத்தை

தொடாமல் செய்தியை படிப்பதென்பது.. கம்பி மேல் நடப்பதற்கு சமம்

mohanram.ko

சாப்பிடுவதற்கு முன் உணவை காக்காவுக்கு வைக்கிற மாதிரி, வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்ல வைக்கிறாங்க...

மித்ரன்

பெட்ரோல் விலை உயர தலிபான்களே காரணம் ~ கர்நாடக பாஜக எம்.எல்.ஏ அரவிந்த் பெல்லாட்

இந்த வாட்டி நேருக்கு லீவ் குடுத்துட்டானுங்க போல..?!

balebalu

பிரதமர் நரேந்திர மோடி இந்த மாதம் இறுதியில் அமெரிக்கா பயணம் செய்ய உள்ளதாக தகவல் -

கிளம்பிட்டாரய்யா கிளம்பிட்டாரு

ச ப் பா ணி

போரடிக்குதேனே யாருக்காவது

போன் செய்து பேசிக் கொண்டிருக்கும் போது தான்..ஏழு பேர் கால் பண்ணுவாங்க

-Factu

தர்மஅடி தர்மலிங்கம்

வேளாண் சட்டங்களை எதிர்ப்பது விவசாயிகளுக்கு செய்யும் துரோகம்: அண்ணாமலை!

ஆமாமா... இப்படி நீங்க சொல்லாட்டி அது உங்க கட்சிக்கு செய்யுற துரோகமாகிடுமே.

மயக்குநன்

கோவைக்கு தனியாக எய்ம்ஸ் மருத்துவமனை வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்!- அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

மதுரை 'ஒத்தச் செங்கலுக்கே' எப்ப விமோசனம் வரப்போகுதுனு தெரியலியே..?!

கோழியின் கிறுக்கல்!!

மனைவியின் குடும்ப WhatsApp groupல் இருப்பது இரட்டை ஆயுள் தண்டனைக்கு சமம்!!

-லாக் ஆஃப்

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

6 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

நடிகர்களை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா மந்தனா

3 நிமிட வாசிப்பு

நடிகர்களை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா மந்தனா

வாகா எல்லையில் நடிகர் அஜித்

2 நிமிட வாசிப்பு

வாகா எல்லையில் நடிகர் அஜித்

திங்கள் 6 செப் 2021