மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 6 செப் 2021

சூரரைப் போற்று: கூரியரில் வந்த விருது!

சூரரைப் போற்று: கூரியரில் வந்த விருது!

ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்னில் சர்வதேச இந்தியத் திரைப்பட விழா நடைபெற்றது. அந்த விழாவில் 'சூரரைப் போற்று' படத்துக்குச் சிறந்த படம், சிறந்த நடிகர் என இரண்டு விருதுகள் கிடைத்தன.

கொரோனோ சூழல் காரணமாக விழா நிகழ்வுகள் ஆன்லைன் மூலம் நடைபெற்றது. விருதுகள் வென்ற பிறகு வீடியோ மூலம் சூர்யாவும் நன்றி தெரிவித்துப் பேசினார். அந்த விருதுகள் சூர்யாவுக்கு ஆஸ்திரேலியாவிலிருந்து கூரியர் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

அந்த விருதுகளை சூர்யா, மனைவி ஜோதிகா, தயாரிப்பாளர் கற்பூர சுந்தர பாண்டியன் ஆகியோருடன் சேர்ந்து பிரித்தார். அந்த வீடியோவை, படத்தைத் தயாரித்த 2டி நிறுவனம் ட்விட்டரில் வெளியிட்டது.

இரண்டு விருதுகளை தனது கணவர் வென்றதற்கு ஜோதிகா மிகவும் மகிழ்ந்து தொடர்ந்து கைதட்டிக் கொண்டே இருந்தார். சில தினங்களுக்கு முன்புகூட இந்தி நடிகர் அமிதாப்பச்சன் 'சூரரைப் போற்று' படப் பாடலான 'கையிலே ஆகாசம்' பாடல் தன்னைக் கண்ணீர் விட வைத்ததாக பாராட்டி எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-இராமானுஜம்

யோகிபாபுவுக்கு நன்றி சொன்ன விவேக் மகள்!

2 நிமிட வாசிப்பு

யோகிபாபுவுக்கு நன்றி சொன்ன விவேக் மகள்!

ஐபிஎல்: கோலி அணியை வீழ்த்திய டோனி அணி!

5 நிமிட வாசிப்பு

ஐபிஎல்: கோலி அணியை வீழ்த்திய டோனி அணி!

ஒன்றிய அரசுக்கு பயப்படும் விஜய்: தயாரிப்பாளர் கே.ராஜன்

3 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசுக்கு பயப்படும் விஜய்: தயாரிப்பாளர் கே.ராஜன்

திங்கள் 6 செப் 2021