மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 6 செப் 2021

கதாநாயகியாக அறிமுகமாகும் ஷங்கர் மகள்!

கதாநாயகியாக அறிமுகமாகும் ஷங்கர் மகள்!

இயக்குநர் ஷங்கரின் இளைய மகளான அதிதி ஒரு நடிகையாக தமிழ்ச் சினிமாவில் அறிமுகமாகிறார். அந்தப் படத்தைத் தயாரிக்கப்போவது தமிழ்ச் சினிமாவின் மிகப் பெரிய தயாரிப்பு நிறுவனமாகும்.

நடிகர் சூர்யாவின் 2-டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் அதிதி ஷங்கர் நாயகியாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் நாயகனாக நடிக்கப் போவது நடிகர் கார்த்தி. இந்தப் படத்தை இயக்கப்போவது ‘கொம்பன்’ படத்தை இயக்கிய முத்தையா. ஆக, தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்த ஒரு கூட்டணியில் இணைந்து நடிக்கிறார் அதிதி சங்கர்.

தி.நகரில் ஷங்கரின் வீட்டுக்கு எதிரில்தான் சூர்யாவின் வீடு உள்ளது. இரு குடும்பத்தினரும் மிக நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகிறார்கள். அதிதி ஷங்கர் சிவகுமாரின் வீட்டுக்கு வந்து செல்லும் அளவுக்கு நெருக்கமானவராக இருப்பதால், அவரது அழகைப் பார்த்துதான் சினிமா ஆசையைத் தூண்டிவிட்டிருப்பார்களோ என்று தோன்றுகிறது.

முதல் படத்திலேயே கிராமத்து வேடத்தில், பாவாடை தாவணியில் கலக்கினால் மிக எளிதாக தமிழகத்து இளைஞர்களின் மனதில் இடம்பிடிக்கலாம் என்ற திட்டத்தின்படி ‘கொம்பன்’ முத்தையாவும் உள்ளே இழுக்கப்பட அமர்க்களமான கூட்டணி ஆரம்பமாகியுள்ளது. கொம்பன் என்ற தலைப்பைப் போலவே விருமன் என்ற பெயருடன் கூடிய தலைப்பைச் சூட்டியிருக்கிறார்கள்.

ஆக மொத்தத்தில் எதையும் திட்டமிட்டு கச்சிதமாக அதே நேரம் பிரமாண்டமாகவும் செய்வதில் வல்லவரான இயக்குநர் ஷங்கர், தனது மகளின் திரையுலகப் பிரவேசத்தை மிக அழகாக திட்டமிட்டு கொணர்ந்திருக்கிறார்.

இந்தப் படத்தின் பூஜை இன்று (6.9.2021) திங்கட்கிழமை காலையில் நடைபெறுகிறது. இம்மாதம் 18ஆம் தேதி தேனியில் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற இருக்கிறது

-இராமானுஜம்

ஹிட் அடித்த பாலகிருஷ்ணா, தோல்வியில் மோகன்லால்

3 நிமிட வாசிப்பு

ஹிட் அடித்த பாலகிருஷ்ணா, தோல்வியில் மோகன்லால்

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

12 நிமிட வாசிப்பு

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

மோகன்லால் விரும்பி கேட்ட பிரபு

3 நிமிட வாசிப்பு

மோகன்லால் விரும்பி கேட்ட பிரபு

திங்கள் 6 செப் 2021