மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 5 செப் 2021

விவாகரத்து: வைரலாகும் சமந்தாவின் மீம்!

விவாகரத்து: வைரலாகும் சமந்தாவின் மீம்!

சமீப நாட்களாக நடிகை சமந்தா, தனது கணவரும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக உள்ள சைதன்யாவை விவாகரத்து செய்யவிருப்பதாகச் செய்திகள் பரவி வருகின்றன.

ட்விட்டரில் தன் கணவரின் குடும்பப் பெயரான அக்கினேனியை தன் திருமணத்திற்குப் பின்னால் சேர்த்துக் கொண்டிருந்த சமந்தா கடந்த மாதம் திடீரென்று அந்தப் பெயரை நீக்கியதால்தான் ஊடகங்களுக்குச் சந்தேகம் எழுந்தது.

இதனால் தெலுங்கு ஊடகங்கள் சமந்தாவுக்கும், நாகசைதன்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் விரைவில் விவாகரத்து செய்யவிருக்கிறார்கள். சமந்தா தற்போது தனது தோழி வீட்டில் இருக்கிறார். எனவேதான் அவர் ட்விட்டரில் பெயரை மாற்றியுள்ளதாகச் செய்திகள் வெளியிட்டன.

ஆனால் இந்த விவகாரம் குறித்து சமந்தாவோ, நாகசைதன்யாவோ இதுவரையிலும் எந்தவிதக் கருத்தும் கூறவில்லை.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடிய தனது மாமனார் நாகர்ஜூனாவுக்கு, “உங்கள் மீதான எனது மரியாதையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. எப்பொழுதும் உங்களுக்கு ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்க வேண்டும். பிறந்த நாள் வாழ்த்துக்கள் மாமா” எனக் கூறி சமந்தா வாழ்த்துத் தெரிவித்திருந்தார்.

இருந்தாலும் இந்த வாழ்த்துக்கு சமந்தாவின் மாமனாரான நாகார்ஜூனா பதில் நன்றி சொல்லாமல் விட்டதினால் விவாகரத்து உறுதி போலும் என்று பல ஊடகங்கள் மீண்டும் தங்களது கருத்தை வெளிப்படுத்தின.

இந்நிலையில் ஊடகங்களைக் கிண்டல் செய்யும் வகையில் மீம்ஸ் ஒன்றைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் சமந்தா.

அதில் நாய் ஒன்று ஆக்ரோஷமாக இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து 'ஊடகங்கள்' குறித்து கூறப்படுவது என்றும். அமைதியாக இருக்கும் நாய்களின் புகைப்படத்தைப் பகிர்ந்து ஊடகத்தின் உண்மை நிலை என்றும் குறிப்பிட்டுள்ளார் சமந்தா.

தனது விவாகரத்து பற்றிய செய்தியை வெளியிட்ட ஊடகங்களை விமர்சிக்கும் விதமாகவே அவர் இந்த பதிவைப் பகிர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சமீபத்தில் தி பேமிலிமேன் வலைதொடரில் இலங்கை தமிழ் பெண்ணாக நடித்திருந்த சமந்தாவுக்கும், அந்த தொடருக்கும் உலக தமிழர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. அப்போது எந்தவித கருத்தையும் தெரிவிக்காமல் மௌனம் சாதித்த சமந்தா நீங்கள் வருத்தப்பட்டதாக அறிந்தேன். அதற்குக் காரணமாகிவிட்ட நான் வருத்தம் தெரிவிக்கிறேன் என குழப்பமான பதிலைத் தெரிவித்திருந்தார்.

அவரது விவாகரத்து செய்தி ஊடகங்களில் வெளியானபோது அவரோ அல்லது அவரது மாமனார் குடும்பமோ உடனடியாக அதற்கு பதில் தெரிவித்திருக்கலாம். இரு தரப்பும் மௌனமாக இருந்து விட்டு இப்போது நாயுடன் தெலுங்கு ஊடகங்களை ஒப்பிடுவது அநாகரிகமான செயல் என்கிறார் மூத்த தெலுங்கு பத்திரிகையாளர் ஒருவர்.

ஊடகங்களில் வெளியாகும் யூக செய்திகள் பெரும்பாலும் தெலுங்கு திரையுலகில் பொய்யானது இல்லை அது சமந்தா விஷயத்திலும் பொய்யாகாது என்றார்.

-இராமானுஜம்

அஜித்குமார் கேட்ட ஆலோசனை!

2 நிமிட வாசிப்பு

அஜித்குமார் கேட்ட ஆலோசனை!

வெற்றியை பதிவு செய்த கோடியில் ஒருவன்!

4 நிமிட வாசிப்பு

வெற்றியை பதிவு செய்த கோடியில் ஒருவன்!

பிக்பாஸ் ஒளிபரப்பு தேதிகள் அறிவிப்பு!

5 நிமிட வாசிப்பு

பிக்பாஸ்  ஒளிபரப்பு தேதிகள் அறிவிப்பு!

ஞாயிறு 5 செப் 2021