மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 5 செப் 2021

பொன்னியின் செல்வன்: த்ரிஷா மீது புகார்!

பொன்னியின் செல்வன்: த்ரிஷா மீது புகார்!

பொன்னியின் செல்வன் போன்ற வரலாற்று புதினங்களை, திரைப்படமாக தயாரிக்கும் போது பல்வேறு நெருக்கடி, தடைகளை கடந்துதான் சாதிக்க வேண்டியிருக்கும் என்பார்கள்.

பொன்னியின் செல்வன் நாவல் நாட்டுடைமை ஆவதற்கு முன்பாகவே அதனை திரைப்படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டார் எம்.ஜி.ராமச்சந்திரன். அதற்கான திரைக்கதை வசனம் எழுதும் பொறுப்பை மறைந்த இயக்குநர் மகேந்திரனிடம் ஒப்படைத்து அவருக்கு மாதந்தோறும் ஊதியம் வழங்கிவந்தார் எம்.ஜி.ஆர். ஆனால் அவரால் பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க முடியவில்லை அதேபோன்று "மருதநாயகம்" வரலாற்றை படமாக எடுக்க கமல்ஹாசன் முயற்சி செய்தார். தொடக்கவிழாவுடன் தடைபட்டுபோனது அந்தப்படம்.

பொன்னியின் செல்வன் நாவலின் காதலரான புலம்பெயர்ந்த இலங்கை தமிழர் சுபாஷ்கரண், மணிரத்னம் இயக்கத்தில் பட்ஜெட் பற்றி கவலைப்படாமல் படத்தை தயாரிக்க முன்வந்தார்

பொன்னியின் செல்வன் அறிவிக்கப்பட்டது முதல் அதன் தயாரிப்பு நிறுவனத்திற்கு தொழில்ரீதியாக பல்வேறு நெருக்கடிகள், பொருள், உயிர் இழப்புகள் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம் இருந்தாலும் படத் தயாரிப்பில் இருந்து லைகா சுபாஷ்கரன் பின் வாங்கவில்லை. கொரோனா ஊரடங்கு முடிந்து இந்தப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது மத்தியப் பிரதேச மாநிலம் ஹரிகேஷ்வரில் நடைபெற்று வருகிறது.

அங்குள்ள பிரபலமான ராணி அகில்யாபாய் கோட்டை, அரண்மனை மற்றும் சிவன் கோவில்களில், கடந்த 5 நாட்களாக படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஹரிகேஷ்வரில் நர்மதா நதியின் கரைகளில் பல சிவலிங்கங்கள் நந்தியுடன் அமைந்துள்ளன.

கடந்த 1767-ம் ஆண்டு இந்த பகுதியை ஆண்ட ராணி அகில்யா பாயால் அமைக்கப்பட்ட சிவலிங்கங்கள் மற்றும் நந்தி ஆகியவை இந்துக்களால் புனிதமாக கருதப்படுகிறது.

நேற்று முன்தினம் அந்த இடத்தில் நடிகை த்ரிஷா ஒரு படகில் வருவது போன்ற காட்சி படமாக்கப்பட்டிருக்கிறது. படகிலிருந்து கரை வந்திறங்கிய த்ரிஷா கரையில் இருந்த ஒரு நந்தி மற்றும் சிவலிங்கத்துக்கு இடையே நடந்து வரும் காட்சியும் படமாக்கப்பட்டது.

அப்போது த்ரிஷா காலணியுடன் நடந்து வந்ததாக கூறப்படுகிறது. தற்போது இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. காலணியுடன் நடந்து வந்து நடிகை த்ரிஷா சிவலிங்கத்தை அவமதித்து விட்டதாக இந்து அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக இயக்குனர் மணிரத்னம் மற்றும் த்ரிஷாவை கைது செய்யுமாறு ஹரிகேஷ்வர் போலீஸ் நிலையத்தில் இந்து அமைப்புகள் புகார் செய்துள்ளனர். இந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் குதிரை ஒன்று உயிரிழந்துவிட்டதற்காக இயக்குனர் மணிரத்னம் மீது பீட்டா இந்தியா அமைப்பு மூலம் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

-இராமானுஜம்

அரண்மனை 3 படத்தை வாங்கிய உதயநிதி

4 நிமிட வாசிப்பு

அரண்மனை 3 படத்தை வாங்கிய உதயநிதி

ரூ.10 கோடியில் நடிகர் சங்கத்துக்கு கட்டிடம்: பிரகாஷ் ராஜ்

2 நிமிட வாசிப்பு

ரூ.10 கோடியில் நடிகர் சங்கத்துக்கு கட்டிடம்: பிரகாஷ் ராஜ்

ஆட்டிசம் பாதித்த பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ்

3 நிமிட வாசிப்பு

ஆட்டிசம் பாதித்த பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ்

ஞாயிறு 5 செப் 2021