மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 5 செப் 2021

விறுவிறுப்பான நான்காவது டெஸ்ட்: ரோகித் 127 - இந்தியா 270/3

விறுவிறுப்பான நான்காவது டெஸ்ட்: ரோகித் 127 - இந்தியா 270/3

இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில் ரோகித் 127 ரன்கள் எடுத்தார். இந்தியா மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 270 ரன்கள் எடுத்துள்ளது.

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 191 ரன்களும், இங்கிலாந்து அணி 290 ரன்களும் அடித்தன. இதையடுத்து 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் எடுத்திருந்தது. ரோகித் சர்மா 20 ரன்னுடனும், கே.எல்.ராகுல் 22 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று மூன்றாவது நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து ஆடிய கே.எல்.ராகுல் 46 ரன்களில் ஆட்டமிழக்க, ரோகித் சர்மா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார். இதன்மூலம் வெளிநாட்டில் முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். தொடர்ந்து ஆடிய அவர் 127 ரன்களில் ஆட்டமிழந்தார். அதேபோல் மறுமுனையில் பொறுப்புடன் ஆடிய புஜாரா, 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 237 ரன்கள்.

அதன்பின்னர் விராட் கோலி, ஜடேஜா இருவரும் நிதானமாக விளையாட, 92 ஓவர் முடிந்தபோது போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. நீண்டநேரமாக வானிலை சீரடையாததால், மூன்றாவது நாள் ஆட்டம் அத்துடன் நிறைவு செய்யப்பட்டது. ஆட்டநேர முடிவில் இந்தியா மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 270 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 22 ரன்களுடனும், ஜடேஜா 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இந்திய அணி 171 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்னும் இரண்டு தினங்கள் எஞ்சியுள்ளதால், இந்தப் போட்டி பரபரப்பான கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

-ராஜ்

விருதுகளை அள்ளிய அசுரன்!

2 நிமிட வாசிப்பு

விருதுகளை அள்ளிய அசுரன்!

கார்த்தி முடிவால் வட்டியில் சிக்கிய தயாரிப்பாளர்!

4 நிமிட வாசிப்பு

கார்த்தி முடிவால் வட்டியில் சிக்கிய தயாரிப்பாளர்!

ஐபிஎல்: மும்பையை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ்!

6 நிமிட வாசிப்பு

ஐபிஎல்: மும்பையை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஞாயிறு 5 செப் 2021