முதல்வரைச் சந்திக்க முயற்சி செய்யும் தலைவி படக்குழு!

entertainment

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு ‘தலைவி’ எனும் பெயரில் திரைப்படமாக உருவாகியுள்ளது.

ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ளார். கொரோனா காரணமாக நீண்ட காலமாக தள்ளிபோன இந்தப் படம் வரும் செப்டம்பர் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் டிரெய்லர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இந்தப் படத்தில் எம்.ஜி.ஆராக நடிகர் அரவிந்தசாமி நடித்துள்ளார். அவரின் கெட்டப், பார்ப்பதற்கு அப்படியே எம்.ஜி.ஆர் போன்று உள்ளதாக பலரும் அப்போதுஅரவிந்த்சாமியை வாழ்த்தினர்.

இந்தப் படத்துக்கான இறுதிக்கட்ட பணிகள் கடந்த வருடமே முடிவடைந்த நிலையில், அப்போதே படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தனர் படக்குழுவினர். ஆனால் கொரோனா தொற்று, ஊரடங்கு காரணமாக தியேட்டர் மூடப்பட்டிருந்தது போன்ற காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது.

இந்த நிலையில் கடந்த மே மாதம் ‘தலைவி’ படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தனர் படக்குழுவினர். ஆனால் கொரோனா இரண்டாம் அலையால் மறுபடியும் பட ரிலீஸ் தள்ளி போனது.

பிரமாண்டமாக உருவாகியுள்ள தலைவி படத்தைத் திரையரங்குகளில்தான் வெளியிட வேண்டும் என்பதில் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் தரப்பில் உறுதியாக இருந்தனர். இந்த நிலையில் அண்மையில் தமிழ்நாட்டில் திரையரங்குகள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு. அதன்படி வருகிற செப்டம்பர் 10ஆம் தேதி ‘தலைவி’ படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் நடிகை கங்கனா ரணாவத் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்திலும், முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி நினைவிடத்திலும் நேற்று (செப்டம்பர் 4) காலை மரியாதை செலுத்தியுள்ளார். இந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாக உள்ளது.

தலைவி படத்தின் பெரும்பகுதி வசூல் தமிழக திரையரங்குகளை நம்பியுள்ளது. இந்தப் படம் தொடங்கப்பட்டு படத்தை வெளியிட திட்டமிட்ட தேதி என அனைத்து காலங்களும் அதிமுக தலைமையிலான ஆட்சி தமிழகத்தில் இருந்தது. ஜெயலலிதா சினிமா, அரசியல் வாழ்க்கையில் எம்.ஜி.ஆர், மு.கருணாநிதி ஆகியோரை தவிர்க்க முடியாது.

ஜெயலலிதாவின் பிரதான அரசியல் எதிரியான முன்னாள் முதல்வர் கலைஞரின் கதாபாத்திரம் எப்படி காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் என்பதுதான் தமிழக அரசியல் களத்தில் எதிர்பார்க்கப்படும் ஒன்றாக உள்ளது. அதிமுக ஆட்சிக்காலத்தில் தலைவி வெளியாகி இருந்தால் அதிகார மையத்தின் பாதுகாப்பு கிடைத்திருக்கும்.

தற்போது தமிழகத்தில்இருப்பது திமுக ஆட்சி என்பதால் இரண்டு கட்சிகளையும் அனுசரித்து போக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால் ஜெயலலிதாவாக நடித்த கங்கனா ரணாவத் அவரது நினைவு இடத்தில் மட்டுமல்லாது கலைஞர் நினைவு இடத்திலும் அஞ்சலி செலுத்தியுள்ளார். படம் வெளியீட்டுக்கு முன் தலைவி படத்தின் இயக்குநர் ஏ.எல்.விஜய் மற்றும் கங்கனா ரணாவத், கலைஞராக நடித்துள்ள நாசர் மூவரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்திக்க முயற்சி மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.

**-இராமானுஜம்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *