மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 4 செப் 2021

பாரா ஒலிம்பிக்: இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்!

பாரா ஒலிம்பிக்: இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்!

பாரா ஒலிம்பிக்கில் வில் வித்தை (ரிகர்வ்) போட்டியில் இந்திய வீரர் ஹர்விந்தர் சிங் வெண்கலம் வென்றுள்ளதால் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16ஆவது பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் பிரவீன்குமார் வெள்ளிப்பதக்கம், துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீராங்கனை அவனி லெகாரா வெண்கலப் பதக்கம் வென்றனர்.

இந்த நிலையில், இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது. வில்வித்தை (ரிகர்வ்) போட்டியில் இந்திய வீரர் ஹர்விந்தர் சிங் வெண்கலம் வென்று அசத்தி உள்ளார். அரை இறுதியில் தோல்வி அடைந்த ஹர்விந்தர் சிங், வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில், தென்கொரிய வீரர் கிம் மின் சூவை 6-5 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தினார்.

இதன்மூலம் நடப்பு பாரா ஒலிம்பிக்கில் இதுவரை இந்தியா 2 தங்கம் உட்பட 13 பதக்கங்களை வென்றுள்ளது. இதுவரை இல்லாத வகையில், பாரா ஒலிம்பிக்கில் இந்திய அணி அதிக பதக்கங்கள் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

-ராஜ்

மகேஷ் பாபுக்கு பதிலளித்த ஏ.ஆர். ரஹ்மான்

2 நிமிட வாசிப்பு

மகேஷ் பாபுக்கு பதிலளித்த ஏ.ஆர். ரஹ்மான்

எஸ்பிபியின் மனதில் இளையராஜா

4 நிமிட வாசிப்பு

எஸ்பிபியின் மனதில் இளையராஜா

திரைக்கு வரும் ஆன்டி இண்டியன்!

9 நிமிட வாசிப்பு

திரைக்கு வரும் ஆன்டி இண்டியன்!

சனி 4 செப் 2021