மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 4 செப் 2021

ரஷ்யாவில் அஜீத் தங்க காரணம்?

ரஷ்யாவில் அஜீத் தங்க காரணம்?

போனிகபூர் தயாரிப்பில் அஜீத்குமார் நாயகனாக நடித்து வந்த ‘வலிமை’ திரைப்படத்தின் மொத்தப் படப்பிடிப்பும் முடிவடைந்து விட்டது.

கடைசிக் கட்ட படப்படிப்பு சில நாட்களுக்கு முன்பாக ரஷ்யாவில் நடைபெற்று முடிந்தது. இந்தப் படப்பிடிப்பில் அஜீத்குமார் கலந்து கொண்ட பைக் ரேஸ்.. மற்றும் சில சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து ‘வலிமை’ படக் குழுவினர் தாயகம் திரும்பிவிட்டார்கள். ஆனால், அஜீத் மட்டும் இன்னும் ரஷ்யாவில்தான் இருப்பதாகத் தெரிகிறது. ரஷ்யாவில் அஜீத் தனது பைக் டிராவலிங்கை தொடர இருப்பதாகவும் அதனால்தான் அவர் மட்டும் வரவில்லை என்றும் படக் குழுவில் இருந்து கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன.

ரஷ்யாவில் அஜீத் பைக்குடன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. நடிகர் அஜித் ஏற்கனவே சென்னையில் இருந்து சிக்கிம் மாநிலம் வரை சுமார் 10,000 கிலோ மீட்டர் தூரம் பைக்கில் பயணம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வலிமைபடத்தின் ரஷ்ய காட்சிகள் மட்டுமே தற்போது எடிட் செய்யப்பட்டு பின்னணி வேலைகள் தொடரப்பட வேண்டும். மற்றைய காட்சிகள் அனைத்தையும் ஏற்கெனவே முழுமையாகத் தயார் செய்துவிட்டார்களாம்.

எனவே ‘வலிமை’ திரைப்படம் அடுத்த மாதம் நவராத்திரி பண்டிகை தினத்தில் வெளியாவது உறுதி என்கிறது தயாரிப்பாளர் வட்டாரம்.

-இராமானுஜம்

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

6 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

முதல்வர் வீட்டின் முன் உண்ணாவிரதம் இருப்பேன்: டி.ராஜேந்தர்

8 நிமிட வாசிப்பு

முதல்வர் வீட்டின் முன் உண்ணாவிரதம் இருப்பேன்: டி.ராஜேந்தர்

சனி 4 செப் 2021