மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 4 செப் 2021

தமிழ் ராக்கர்ஸ் பற்றிய வெப் சீரிஸ்!

தமிழ் ராக்கர்ஸ் பற்றிய வெப் சீரிஸ்!

தமிழ் சினிமாவில் 25 ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிக்காக போராடியவர் நடிகர் அருண்விஜய். கெளதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் விக்டர் என்ற வில்லன் வேடத்தில் நடித்த அருண் விஜய்க்கு அந்தவேடம் தமிழ் சினிமாவில் மறுபிரவேசம் செய்வதற்கு திருப்புமுனையாக அமைந்தது.

அதையடுத்து ஈரம் அறிவழகன் இயக்கத்தில் அவர் நடித்த குற்றம் 23 அவரது திரையுலக வரலாற்றில் எதிர்பாராத வெற்றிப்படமாக அமைந்தது. இதையடுத்து ஒரு வெப் சீரிஸில் அறிவழகன் இயக்கத்தில் நடிக்கிறார் அருண் விஜய். தமிழ் ராக்கர்ஸை மையமாக வைத்து இதற்கான திரைக்கதைஉருவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த பல ஆண்டுகளாகவே திரைப்படங்கள் தியேட்டரில் வெளியான சில மணிநேரங்களில் தமிழ் ராக்கர்ஸ் என்ற இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியிடப்பட்டு வருகிறது. இதை தடுக்க திரையுலகினர் எடுத்த எந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை. தொடர்ந்து சினிமாத்துறைக்கு சவாலாகவே செயல்பட்டு வருகிறது தமிழ் ராக்கர்ஸ்.

இந்நிலையில் தமிழ் ராக்கர்ஸை மையமாக வைத்தே இந்த வெப்தொடரை இயக்குகிறார் அறிவழகன். இதை ஓடிடியில் வெளியிட உள்ளனர்.

-இராமானுஜம்

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

சனி 4 செப் 2021