மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 3 செப் 2021

‘பிச்சைக்காரன் 2’ படப்பிடிப்பு தொடக்கம்!

‘பிச்சைக்காரன் 2’ படப்பிடிப்பு தொடக்கம்!

தமிழரசன், காக்கி, அக்னி சிறகுகள், கோடியில் ஒருவன் ஆகிய படங்களில் நடித்து முடித்துவிட்டார் விஜய் ஆண்டனி.

இந்தப் படங்கள் ஒவ்வொன்றாக ரிலீஸாக உள்ளன. முதலாவதாக கோடியில் ஒருவன் படம் செப்டம்பர் 17இல் ரிலீஸாகிறது. இந்த நிலையில், தான் இயக்கும் தனது முதல் படமான பிச்சைக்காரன் 2 படத்தை நேற்று சென்னையில் தொடங்கினார் விஜய் ஆண்டனி. இவரே இதில் நாயகனாக நடித்து, தயாரிக்கவும் செய்கிறார்.

2015இல் சசி இயக்கத்தில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற படம் பிச்சைக்காரன். இந்தப் படத்தை தெலுங்கிலும் ‘பிச்சைக்காடு’ என்ற பெயரில் வெளியிட்டனர். அந்தப் படம் தமிழைவிட அதிகப்படியாக வசூலித்து தெலுங்கு சினிமாவில் விஜய் ஆண்டனியைப் பிரபலப்படுத்தியது.

அதனால் தற்போது தமிழ், தெலுங்கு இரண்டு ரசிகர்களையும் கருத்தில்கொண்டு பிச்சைக்காரன் 2 படத்தை உருவாக்க உள்ளார் விஜய் ஆண்டனி. அடுத்தபடியாக ஹைதராபாத்துக்கும் சென்று முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகளைப் படமாக்கப் போகிறாராம்.

-இராமானுஜம்

நாகசைதன்யா குடும்ப நிகழ்வில் கலந்துகொள்ளாத சமந்தா

3 நிமிட வாசிப்பு

நாகசைதன்யா குடும்ப நிகழ்வில் கலந்துகொள்ளாத சமந்தா

எஸ்பிபியின் மனதில் இளையராஜா

4 நிமிட வாசிப்பு

எஸ்பிபியின் மனதில் இளையராஜா

ராய் லட்சுமியிடம் ரோபோ சங்கர் நடந்து கொண்ட விதம்!

5 நிமிட வாசிப்பு

ராய் லட்சுமியிடம் ரோபோ சங்கர் நடந்து கொண்ட விதம்!

வெள்ளி 3 செப் 2021