மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 3 செப் 2021

ராஜமெளலியால் தடைபடும் ஷங்கர் படம்!

ராஜமெளலியால் தடைபடும் ஷங்கர் படம்!

கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி ஷங்கர், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் படம் இந்தியன் 2. அனிருத் இசையில் லைகா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் சிக்கல் சமீபத்தில் முடிவுக்கு வந்தது. ஒரு மாலை நேரத்தில் லைகா கருணாகரனும், ஷங்கரும் குடும்ப சகிதமாக சந்தித்துக் கொண்டனர். அதன்பிறகு, இந்தியன் 2 சிக்கல் தீர்வுக்கு வந்திருக்கிறது.

தற்பொழுது, ராம்சரண் நடிக்க ஷங்கர் இயக்க இருக்கும் படம் வருகிற செப்டம்பர் 8 ஆம் தேதி துவங்க திட்டமிட்டிருந்தது படக்குழு. சிறப்பு பூஜையுடன், படப்பிடிப்பை பிரம்மாண்டமாகத் துவங்க திட்டம். இப்படத்தை தெலுங்கின் பிரபல தயாரிப்பாளரான தில்ராஜூ தயாரிக்கிறார். இசை தமன். இப்படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி துவங்காது என்றே சொல்லப்படுகிறது. அதற்கு காரணம் ராஜமெளலி என்று சொல்லப்படுகிறது.

ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் ராஜமெளலி படைப்பாக உருவாகிவரும் படம் ‘ஆர் ஆர் ஆர்’. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிட்டது. பின்னர், படத்தை எடிட் செய்துப் பார்த்திருக்கிறார் ராஜமெளலி. ராம் சரணை விட ஜூனியர் என்.டி.ஆருக்கு படத்தில் அதிக காட்சிகள் இடம்பெறுகிறதாம். இதனால், ராம்சரணின் காட்சிகள் பெரிதாகத் திரையில் எடுக்கவில்லையென சொல்லப்படுகிறது. அதனால், 10 நாட்கள் ரீ ஷூட் செய்ய திட்டமாம்.

ஆர்.ஆர்.ஆர். படத்தின் ரீஷூட் காரணமாக, திட்டமிட்டபடி ஷங்கர் - ராம்சரண் படம் துவங்காது என்றே சொல்லப்படுகிறது. இதனால் ஷங்கர் அப்செட் ஆனாலும், இந்தியன் 2 சிக்கல் தீர்வுக்கு வந்திருப்பதால் மாற்று யோசனையுடன் இருக்கிறாராம் ஷங்கர்.

ராம் சரண் வருவதற்குள் இந்தியன் 2 படத்தை முடித்துவிட திட்டமிட்டிருக்கிறாராம். ஆனால், லோகேஷ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் கமல்ஹாசன் பிஸியாக இருப்பதால், கமல் இடம்பெறாத சித்தார்த், பாபிசிம்ஹா உள்ளிட்டோர் இடம்பெறும் காட்சிகளை முடித்துவிட இருக்கிறாராம் கமல்ஹாசன்.

-ஆதினி

கார்த்தி முடிவால் வட்டியில் சிக்கிய தயாரிப்பாளர்!

4 நிமிட வாசிப்பு

கார்த்தி முடிவால் வட்டியில் சிக்கிய தயாரிப்பாளர்!

வெங்கட்பிரபுவுடன் ஜோடி சேர்ந்த சினேகா

2 நிமிட வாசிப்பு

வெங்கட்பிரபுவுடன் ஜோடி சேர்ந்த சினேகா

பொன்னியின் செல்வன் ‘வந்தியதேவன்’ புறப்பட்டார்!

2 நிமிட வாசிப்பு

பொன்னியின் செல்வன் ‘வந்தியதேவன்’ புறப்பட்டார்!

வெள்ளி 3 செப் 2021