மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 3 செப் 2021

இலங்கை தமிழர்களுக்காக பாடல் எழுதிய கவிஞர் தாமரை

இலங்கை தமிழர்களுக்காக பாடல் எழுதிய கவிஞர் தாமரை

வலியையும் வாழ்க்கையையும் சொல்லும் விதமாக அவ்வப்போது சில படங்கள் வெளியாகின்றன. அந்த வகையில் அப்பா, மகள் பாசப்பின்னணியில் இலங்கை போரின் கோரதாண்டவத்தை எடுத்துக்கூறும் படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் தான் "தாய்நிலம்". நேமி புரொடக்ஷன்ஸ் சார்பில் டாக்டர் அமர் ராமசந்திரன் தயாரித்துள்ள இந்த படத்தை அபிலாஷ் ஜி தேவன் இயக்கியுள்ளார்.

ரஷ்யா, ஸ்வீடன், டொராண்டோ உட்பட இதுவரை பதினொன்று சர்வதேச திரைப்பட விழாக்களில் தேர்வான இத்திரைப்படம் பல பிரிவுகளில் எட்டு விருதுகளை வென்றிருக்கிறது.

தேசிய விருதுபெற்ற பிரபல மலையாள இசை அமைப்பாளர் அவுசப்பச்சன் இந்த படத்திற்கு

இசை அமைத்திருக்கிறார்.

இத்திரைப்படத்தில் கவிஞர் தாமரை எழுதி வர்ஷா இரஞ்சித் பாடியுள்ள "ஆகாயம் மேலே" என்ற பாடல் இலங்கை தமிழ் மக்களின் இழப்புகளையும், வலியையும் அனாதையாக தவிக்கும் மக்களின் வாழ்க்கையையும் கூறும் விதத்தில் அமைந்திருக்கிறது.

கேட்பவர்களில் மனதில் ஆழமாக பதிந்துவிடும் வகையில் அமைந்திருக்கும் இந்தப் பாடல்

இன்று(3.09.2021)சரிகம தமிழ் குழுமத்தின் யூட்யூப் பக்கத்தின் வாயிலாக வெளியிடப்பட்டுள்ளது.

-இராமானுஜம்

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

12 நிமிட வாசிப்பு

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

தன் வாயால் சர்ச்சையில் சிக்கிய அஷ்வின்

7 நிமிட வாசிப்பு

தன் வாயால்  சர்ச்சையில் சிக்கிய அஷ்வின்

அதர்வா படத்தை ராஜ்கிரண் தவிர்க்கிறாரா?

2 நிமிட வாசிப்பு

அதர்வா படத்தை ராஜ்கிரண் தவிர்க்கிறாரா?

வெள்ளி 3 செப் 2021