மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 3 செப் 2021

படப்பிடிப்பில் உயிரிழப்பு: இயக்குநர் மணிரத்னம் மீது வழக்கு!

படப்பிடிப்பில் உயிரிழப்பு: இயக்குநர் மணிரத்னம் மீது வழக்கு!

படப்பிடிப்புகளில் உயிருடன் உள்ள விலங்குகளை பயன்படுத்துவதற்கு பீட்டா இந்தியா கட்டுப்பாடு விதித்துள்ளது. இதற்கு எதிராக போராடி பயன் இல்லாமல் போனதால் யானை, ஒட்டகம், குதிரை, மாடுகள், நாய் போன்ற விலங்குகளை திரைப்படங்களில் பயன்படுத்துவதை இயக்குநர்கள் தவிர்த்து விடுகின்றனர். தவிர்க்க முடியாத நிலையில் கிராபிக்ஸ் மிருகங்கள் பயன்படுத்தப்படுகிறது.

இந்த நிலையில் இயக்குநர் மணிரத்னம் 'பொன்னியின் செல்வன்' படத்தைத் தற்போது இயக்கி வருகிறார். சரித்திரக் கதை என்பதால் இப்படத்தின் படப்பிடிப்பில் குதிரை, யானை உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 11ஆம் தேதியன்று இப்படத்தின் படப்பிடிப்பில் குதிரை ஒன்று இறந்ததற்கு பீட்டா இந்தியா அமைப்பு மணிரத்னம் மீது ஐதராபாத்தில் உள்ள அப்துல்லபுர்மேட் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளது.

அதன் அடிப்படையில்ஆகஸ்ட் 18ஆம் தேதியன்று எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தெலங்கானா மாநில விலங்குகள் நலவாரியம், ஐதராபாத் மாவட்ட கலெக்டர் ஆகியோர் விசாரிக்க வேண்டும் என இந்திய விலங்குகள் நல வாரியமும் உத்தரவிட்டுள்ளது.

அந்த விபத்து பற்றிய வீடியோ அல்லது போட்டோ பதிவை யாராவது அளித்தால் அவர்களுக்கு 25,000 ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்றும் பீட்டா இந்தியா அறிவித்துள்ளது.

படப்பிடிப்பில் உண்மையான உயிருடன் உள்ள விலங்குகளை பயன்படுத்தாமல் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மூலம் விலங்குகளைப் பயன்படுத்த வேண்டும். இந்தக் கொடுமையை மணிரத்னம் நிறுத்த வேண்டும் என்று பீட்டா இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது.

இயக்குனர் மணிரத்னத்திற்கு எதிராக பீட்டா இந்தியா அளித்துள்ள இந்தப் புகார் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-இராமானுஜம்

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

12 நிமிட வாசிப்பு

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

மாறனின் படத்தைப் புகழ்ந்து தள்ளிய இயக்குநர்கள்!

4 நிமிட வாசிப்பு

மாறனின் படத்தைப் புகழ்ந்து தள்ளிய இயக்குநர்கள்!

சொந்தப்பட புரொமோஷனுக்கு மட்டும் போலாமா?: கே.ராஜன்

13 நிமிட வாசிப்பு

சொந்தப்பட  புரொமோஷனுக்கு மட்டும் போலாமா?: கே.ராஜன்

வெள்ளி 3 செப் 2021