மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 3 செப் 2021

புதிய ஆசிய சாதனையோடு வெள்ளி வென்ற பிரவீன் குமார்

புதிய ஆசிய சாதனையோடு வெள்ளி வென்ற பிரவீன் குமார்

பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற பிரவீன் குமாருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் கடந்த 24ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இன்று(செப்டம்பர் 3) ஆடவர் உயரம் தாண்டுதல் டி 64 பிரிவுக்கான உயரம் தாண்டுதல் போட்டி நடைபெற்றது. இந்தியா சார்பில் 18 வயதான பிரவீன் குமார் பங்கேற்றார்.

பாரா ஒலிம்பிக் போட்டியில் முதல் முறையாகப் பங்கேற்ற பிரவீன் குமார், 2.7 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது.

பாரா ஒலிம்பிக் வரலாற்றிலேயே டோக்கியோவில் தான் இந்தியா அதிக பதக்கங்களை வென்றுள்ளது. டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டி முடிய இன்னும் இரண்டு நாட்களே உள்ளன.

பாரா ஒலிம்பிக்கில் அறிமுகமான முதலிலே வெள்ளிப் பதக்கம் வென்ற பிரவீன் குமாருக்கு பாராட்டு தெரிவித்துள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில், “சாதனைகளை படைப்பதும் முறியடிப்பதுமாக டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவின் வெற்றி பயணம் தொடர்கிறது.புதிய ஆசிய சாதனையோடு உயரம் தாண்டுதலில் வெள்ளி வென்ற பிரவீன் குமாருக்கு பாராட்டுக்கள்.எதிர்காலத்தில் பிரவீன்குமார் மேலும் பல சாதனைகள் புரிய வாழ்த்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

மீண்டும் சாதனை படைத்த அவனி லெகாரா

ஒரே ஒலிம்பிக் போட்டியில் இரண்டு பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார் இந்தியாவைச் சேர்ந்த அவனி லெகாரா. டோக்கியோவில் நடந்து வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்ற அவனி லெகாரா இன்று நடைபெற்ற 50 மீட்டர் ரைபிள் பிரிவில் வெண்கலம் வென்றார்.

பாரா ஒலிம்பிக் தொடரில் இன்னும் ஒரு ஈவண்ட் இவருக்கு பாக்கியிருக்கிறது. இதிலும் பதக்கம் வென்றுவிட்டால் ஒரே பாரா ஒலிம்பிக்கில் 3 பதக்கங்களை பெறும் முதல் வீராங்கனை என்ற சாதனையை அவனி லெகாரா படைப்பார்.

-வினிதா

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

வெள்ளி 3 செப் 2021