மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 3 செப் 2021

நான்காவது டெஸ்ட் - முதல் நாள் முடிவில் இந்தியா 191/10 - இங்கிலாந்து 53/3

நான்காவது டெஸ்ட் - முதல் நாள் முடிவில் இந்தியா 191/10 - இங்கிலாந்து 53/3

இந்தியா – இங்கிலாந்து இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 191 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 53 ரன்கள் எடுத்துள்ளது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் மூன்று போட்டிகள் முடிந்துள்ள நிலையில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று 1-1 என சமநிலையில் உள்ளன. ஒரு டெஸ்ட் டிராவில் முடிந்தது. நான்காவது டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ் மேன்கள் நிலைக்கவில்லை. ரோகித் சர்மா 11 ரன்கள், கே.எல்.ராகுல் 17 ரன்கள், புஜாரா 4 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். அதன் பின்னர் கேப்டன் கோலி - ரவீந்திர ஜடேஜா இருவரும் நிதானமாக விளையாடினர்.

ஜடேஜா 10 ரன்களில் ஆட்டமிழக்க, கேப்டன் கோலி அரை சதம் அடித்த நிலையில், ராபின்சன் ஓவரில் விக்கெட்டை இழந்தார். அதன்பின்னர் வந்த வீரர்களும் அணியின் ஸ்கோரை உயர்த்த முடியாமல் தடுமாறினர். ரகானே 14 ரன்களிலும், ரிஷப் பண்ட் 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இந்த நெருக்கடியான நேரத்திலும் நேர்த்தியாகவும் அதிரடியாகவும் ஆடிய ஷர்துல் தாகூர் 31 பந்துகளில் அரை சதம் அடித்து நம்பிக்கை அளித்தார். ஆனால், அவர் 57 ரன்கள் எடுத்த நிலையில், துரதிர்ஷ்டவசமாக வோக்சிடம் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.

அதன்பின்னர் பும்ரா (0), உமேஷ் யாதவ் (10) அடுத்தடுத்து ஆட்டமிழக்க, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 191 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் ராபின்சன் மூன்று விக்கெட்டுகள், ஓக்ஸ் நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதையடுத்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ரோரி பர்ன்ஸ், ஹசீப் ஹமீத் ஆகியோரை பும்ரா விரைவில் வெளியேற்றினார். அடுத்து டேவிட் மலானுடன் கேப்டன் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதான ஆட்டத்தை ஆடியது. ஜோ ரூட் 21 ரன் எடுத்தபோது உமேஷ் யாதவிடம் ஸ்டம்பை பறி கொடுத்தார்.

இறுதியில், முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 53 ரன்கள் எடுத்துள்ளது. மலான் 26 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இந்தியா சார்பில் பும்ரா இரண்டு விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

-ராஜ்

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

12 நிமிட வாசிப்பு

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

அர்ஜுன் மீது 'மீ டூ 'புகார்: விரைவில் விசாரணை அறிக்கை!

2 நிமிட வாசிப்பு

அர்ஜுன் மீது 'மீ டூ 'புகார்:  விரைவில் விசாரணை அறிக்கை!

அஜித்துக்கு கைதட்டல் வாங்கிக்கொடுத்த சிவசங்கர்: கே.எஸ்.ரவிகுமார் ...

3 நிமிட வாசிப்பு

அஜித்துக்கு கைதட்டல் வாங்கிக்கொடுத்த சிவசங்கர்: கே.எஸ்.ரவிகுமார்

வெள்ளி 3 செப் 2021