மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 2 செப் 2021

செப் 10ல் வெளியாகுமா ‘தலைவி’?

செப் 10ல் வெளியாகுமா  ‘தலைவி’?

கொரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டன. இதனை ஓடிடி தளங்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த முயற்சித்தன. அந்த முயற்சியை வியாபார ரீதியாக அதிக விலை பெற சில தயாரிப்பு நிறுவனங்கள் பயன்படுத்திக் கொண்டன. ஓடிடி தளங்கள் அதிகமானது. அவர்களுக்கிடையிலான போட்டியில் முன்னணி நடிகர்கள் நடித்த படங்களுக்கு அதிக விலை கிடைக்க தொடங்கியது. இதன் காரணமாக நேரடியாக புதிய படங்களை வெளியிடுவது அதிகமாகி வருகிறது. தியேட்டர்களில் வெளியாகும் புதிய படங்களை ஓடிடி தளங்களில் 50 நாட்களுக்குப் பிறகுதான் வெளியிட அனுமதிக்க வேண்டும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'தலைவி' படத்தை தியேட்டர்களில் வெளியான இரண்டு வாரங்களில் ஓடிடி தளங்களில் வெளியிடுவதற்கான உரிமை அதிக விலைக்கு விற்கப்பட்டிருந்தது. எனவே, படத்தைத் தியேட்டர்களில் திரையிட அணுகிய போது அதற்கு தியேட்டர்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். படத்தைத் திரையிட மாட்டோம் என்றனர்.

இந்நிலையில் தியேட்டர் உரிமையாளர்கள் சில முடிவுகளை எடுத்துள்ளதாக தெரிகிறது.

1.ஓடிடியில் வெளியான படங்களை பின்னர் தியேட்டர்களில் வெளியிட அனுமதிப்பதில்லை,

2.ஓடிடியில் விற்கப்படும் படங்களுக்கு நடத்தப்படும் பிரிவியூ காட்சிகளுக்கு வணிக ரீதியான தியேட்டர்களைக் கொடுப்பதில்லை.

3. தியேட்டர்களில் வெளியாகி நான்கு வாரங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியிடும் படங்களை மட்டுமே தியேட்டர்களில் திரையிடுவது என்று முடிவெடுத்துள்ளார்களாம்.

மேலும், ஓடிடிக்கென தனியாக படங்களைத் தயாரித்துக் கொள்வதில் எந்த ஆட்சேபணையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்கள்.

திரையரங்குகளில் வெளியாகும் படங்களை நூறுநாட்கள் கழித்துத்தான் இணையத்தில் வெளியிடவேண்டும் என்பது திரையரங்கு உரிமையாளர்களின் முந்தைய நிலைபாடாக இருந்தது. மாறிவரும் சூழலுக்கு ஏற்ப தயாரிப்பாளர்கள் நலன் கருதி ஐம்பது நாட்கள் நிறைவடைந்த பின் ஓடிடியில் திரையிட சம்மதம் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனை நான்கு வாரமாக குறைத்தனர்.

ஆனால் இரண்டு வாரங்களில் ஓடிடி தளத்தில் தலைவி படத்தை வெளியிட ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. இந்த முடிவில் தயாரிப்பு தரப்பு உறுதியாக இருந்ததாம். அப்படியானால் படத்தைத் திரையரங்குகளில் வெளியிடமாட்டோம் என்று திரையரங்கு உரிமையாளர்கள் உறுதி காட்டியதால் திரையரங்குகளில் தலைவி வெளியிடப்பட்டு நான்கு வாரம் முடிவடைந்தபின் ஓடிடியில் வெளியிட படத்தின் தயாரிப்பாளர் தரப்பில் உறுதி மொழி கடிதம் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே அறிவித்தபடி செப்டம்பர் 10 அன்று தலைவி தியேட்டர்களில் வெளியாகிறது.

-இராமானுஜம்

யோகிபாபுவுக்கு நன்றி சொன்ன விவேக் மகள்!

2 நிமிட வாசிப்பு

யோகிபாபுவுக்கு நன்றி சொன்ன விவேக் மகள்!

ஐபிஎல்: கோலி அணியை வீழ்த்திய டோனி அணி!

5 நிமிட வாசிப்பு

ஐபிஎல்: கோலி அணியை வீழ்த்திய டோனி அணி!

ஒன்றிய அரசுக்கு பயப்படும் விஜய்: தயாரிப்பாளர் கே.ராஜன்

3 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசுக்கு பயப்படும் விஜய்: தயாரிப்பாளர் கே.ராஜன்

வியாழன் 2 செப் 2021