மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 2 செப் 2021

மாதமொரு படமென... ரிலீஸ் திட்டத்தில் சன்பிக்சர்ஸ் !

மாதமொரு படமென... ரிலீஸ் திட்டத்தில் சன்பிக்சர்ஸ் !

நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் வெற்றிகரமாக இயங்கிவருகிறார் நடிகர் சூர்யா. இவரின் தயாரிப்பில் அடுத்தடுத்து நான்கு படங்கள் பிரைம் ஓடிடியில் வெளியாக இருப்பதாக சமீபத்தில் ஒரு அறிவிப்பு வெளியானது நினைவிருக்கலாம்.

செப்டம்பர் ரிலீஸாக காமெடி டிராமா ஜானரில் ரம்யா பாண்டியன், வாணிபோஜன் , மிதுன் மாணிக்கம் நடிக்க ‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’ படம் வெளியாக இருக்கிறது. அதுபோல, ஆக்டோபர் மாதத்தில் ஜோதிகா, சசிகுமார், சமுத்திரகனி, சூரி, கலையரசன், நிவேதிதா சதீஷ் நடிக்க உருவாகியிருக்கும் ‘உடன்பிறப்பே’ படம் வெளியாக இருக்கிறது.

நவம்பர் மாத ரிலீஸாக த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், ரஜிஷா விஜயன், லிஜிமோல் ஜோஸ் , பிரகாஷ் ராஜ் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ஜெய்பீம்’ படம் வெளியாக இருக்கிறது. இறுதியாக, டிசம்பர் மாத ரிலீஸாக அருண்விஜய், அவரின் மகன் ஆர்னவ் விஜய், தந்தை விஜய்குமார், மற்றும் மஹிமா நம்பியார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள’ஓ மை டாக்’எனும் படம் வெளியாக இருக்கிறது. இப்படி, தயாரிக்கும் நான்கு படங்களையும் மாதமொருமுறை என ரிலீஸை உறுதி செய்தார் சூர்யா. அதே ஃபார்முலாவில் மாதமொரு படமென ரிலீஸைத் திட்டமிட்டு வருகிறது சன்பிக்சர்ஸ் நிறுவனம்.

பொதுவாக, ஒரு பெரிய பட்ஜெட் படத்தைத் தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனங்கள், புதிய படங்களைத் தயாரிக்க தயங்குவார்கள். ஆனால், ரஜினி, விஜய், சூர்யா & தனுஷ் என தமிழின் டாப் நடிகர்களின் படத்தை அசால்டாக தயாரித்துவருகிறது சன்பிக்சர்ஸ். அதுவும், எந்த தடங்கலும் இன்றி, திட்டமிட்டபடி படத்தை உருவாக்கிவருகிறது. அனைத்துப் படங்களையும் தியேட்டரில் மட்டுமே ரிலீஸ் செய்யும் திட்டத்திலும் உறுதியாக இருக்கிறது.

அதன்படி, சன்பிக்சர்ஸின் முதல் ரிலீஸாக ரஜினியின் அண்ணாத்த படம் நவம்பர் மாதம் வெளியாக இருக்கிறது. சிவா இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இமான் இசையில் உருவாகிவரும் இப்படம் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. தீபாவளி ஸ்பெஷலாக, நவம்பர் 04ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இப்படத்தைத் தொடர்ந்து, சூர்யா நடிக்கும் படத்தை டிசம்பரில் கொண்டுவர இருக்கிறார்கள். பேமிலி டிராமா கதைகளில் ஸ்பெஷலிஷ்டான பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்க உருவாகிவரும் படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இந்தப் படத்தை டிசம்பர் மாதம் கிருஸ்துமஸ் தின ரிலீஸாக வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

அடுத்த வருட ஜனவரிக்கு பொங்கல் தின ரிலீஸாக திட்டமிட்டபடி, பீஸ்ட் வெளியாக இருக்காம். நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, யோகிபாபு, செல்வராகவன், அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தின் நான்காவது கட்டப் படப்பிடிப்பு நடந்துவருகிறது. இப்படத்தை பொங்கல் தின ஸ்பெஷலாக அடுத்த வருட ஜனவரி 13ஆம் தேதி ரிலீஸை எதிர்பார்க்கலாம்.

இறுதியாக, பிப்ரவரி மாத ரிலீஸாக தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தை லாக் செய்திருக்கிறார்கள். மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இப்படம் உருவாகிவருகிறது. மற்றப் படங்களுடன் ஒப்பிடுகையில் குறைவான பட்ஜெட்டில், சீக்கிரம் படமாக்கி முடிந்துவிடும் கதைக்களமாம். இப்படத்தைக் காதலர் தின சிறப்பாக வெளியிட படக்குழு திட்டமிட்டிருக்கிறது.

- ஆதினி

விருதுகளை அள்ளிய அசுரன்!

2 நிமிட வாசிப்பு

விருதுகளை அள்ளிய அசுரன்!

கார்த்தி முடிவால் வட்டியில் சிக்கிய தயாரிப்பாளர்!

4 நிமிட வாசிப்பு

கார்த்தி முடிவால் வட்டியில் சிக்கிய தயாரிப்பாளர்!

ஐபிஎல்: மும்பையை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ்!

6 நிமிட வாசிப்பு

ஐபிஎல்: மும்பையை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ்!

வியாழன் 2 செப் 2021