மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 2 செப் 2021

எந்திர மனிதனாக சூர்யா?

எந்திர மனிதனாக சூர்யா?

மணிரத்னம், ஷங்கர், வெற்றி மாறன், லிங்குசாமி, மிஷ்கின், சசி, வசந்த பாலன், கவுதம் மேனன், பாலாஜி சக்திவேல், ஏ.ஆர்.முருகதாஸ், லோகேஷ் கனகராஜ் ஆகிய 11 இயக்குநர்கள் இணைந்து புதிய பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளனர்.

இந்த நிறுவனத்தின் சார்பில் என்ன மாதிரியான படங்களை தயாரிக்க போகிறார்கள், தங்களிடம் உதவியாளர்களாகப் பணியாற்றியவர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவரும் வகையில் அறிமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா, படைப்பு ரீதியா தரமான படங்களை தயாரிக்குமா என்பதற்கு எந்தவிதமான விளக்கங்களும் இதுவரை இல்லை.

இந்த நிலையில் வணிக ரீதியாக, வியாபார முக்கியத்துவமுள்ள கதாநாயகர்கள் நடிக்கும் படங்களைத் தயாரிக்க இவர்கள் முயற்சி எடுப்பார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் முதல் தயாரிப்பாக லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாகவும், இதில் நாயகனாக நடிக்க சூர்யாவிடம் பேச்சுவார்த்தை நடப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சூப்பர் ஹீரோ கதையம்சம் கொண்ட படமாக இது தயாராவதாகவும் கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜின் கனவு படமான ‘இரும்புக்கை மாயாவி’ தான் இந்தப் படம் என்றும் கூறப்படுகிறது

தற்போது ஞானவேல் இயக்கும் ஜெய்பீம், பாண்டிராஜ் இயக்கும் எதற்கும் துணிந்தவன் படங்களில் நடித்து வருகிறார் சூர்யா. இவற்றுள் ஜெய்பீம் படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதேபோல் எதற்கும் துணிந்தவன் படத்தின் படப்பிடிப்பும் முடிவடையும் நிலையில் உள்ளது.

இந்தப் படத்துக்கு பிறகு வெற்றி மாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ள சூர்யா, அந்தப் படத்தை முடித்துவிட்டு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் எந்திர மனிதன் ஆக நடிக்க உள்ளார் எனக் கூறப்படுகிறது.

-இராமானுஜம்

பேரு வச்சாலும் பாடல்... ரகசியத்தைப் பகிர்ந்த இளையராஜா

3 நிமிட வாசிப்பு

பேரு வச்சாலும் பாடல்... ரகசியத்தைப் பகிர்ந்த இளையராஜா

உதயநிதி படத்தில் வடிவேலு?

3 நிமிட வாசிப்பு

உதயநிதி படத்தில் வடிவேலு?

வடிவேலு படத் தலைப்பு: சிவகார்த்திகேயன் கருத்து!

3 நிமிட வாசிப்பு

வடிவேலு படத் தலைப்பு: சிவகார்த்திகேயன் கருத்து!

வியாழன் 2 செப் 2021